புதையல் தோண்டியதாக கைது: 31ம் திகதி வரை விளக்கமறியல்

0
112

(அப்துல்சலாம் யாசீம்-)

Arrested44திருகோணமலை-கல்லம்பத்தை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கைது செய்யப்பட்ட 04 பேரையும் எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  இன்று (17) திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி. சரவணறாஜா உத்தரவிட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஜாயா நகர்-வடலிக்குளம் பகுதிகளைச்சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லம்பத்தை காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது நான்கு பேர் கைது செய்யப்பட்டதாகவும் மற்றைய ஆறு பேர் தப்பியோடியதாகவும் அவர்களை கைது செய்வதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY