பிரதேச செயலக பகுதிநாள் கூட்டம்

0
152

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC05451ஏறாவூர் நகர பிரதேச செயலக பகுதிநாள் கூட்டம் (Division Day Meeting) பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் நேற்று (16) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலகத்திற்கூடாக அமுலாக்கம் செய்யப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் அவற்றுக்கான காரணங்கள் என்பன இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

எதிர்காலத்தில் அமுலாக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான எஸ்.எஸ். வியாழேந்திரன், ஸ்ரீலமுகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா உட்பட பிரதேச செயலக அதிகாரிகள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபன தலைவர்கள் உட்பட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

DSC05468

LEAVE A REPLY