காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு விளக்க மறியல்

0
608

(விசேட நிருபர்)

Prisoner+in+jail+cell+prison remandமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் இளைஞர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிசார் (16.8.2016) காலை கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபரான இளைஞரை நேற்று(16.8.2016) செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி எம்.ஐ.றிஸ்வி முன்னிலையில் ஆஜர் படுத்தியபோது சந்தேக நபரை 30.8.2016ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கிரான்குளம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பூவரசந்தெருவிலுள்ள 7வயது சிறுவன்; (14.8.2016) கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது அப்பிரதேசத்திலுள்ள 18 வயதுடைய இளைஞர் ஒருவர் குறித்த சிறுவனை காட்டுப்பகுதியொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY