தமிழ் மக்க­ளுக்கு மொழி உரி­மையை வழங்­கி­யி­ருந்தால் நாட்டில் யுத்தம் இடம்­பெற்­றி­ருக்­காது: லக்ஷ் மன் கிரி­யெல்ல

0
212

இலங்கை வர­லாற்றில் முதன் முதல் அதி­காரப் பர­வ­லாக்­கலை கேட்­ட­வர்கள் சிங்­க­ள­வர்­க­ளே தவி­ர, தமி­ழர்கள் அல்ல. தமிழ் மக்க­ளுக்கு 1956 ஆம் ஆண்டு மொழி உரி­மையை வழங்­கி­யி­ருந்தால் நாட்டில் முப்­பது வரு­ட­கால யுத்தம் இடம்­பெற்­றி­ருக்­காது என நெடுஞ்­சா­லைகள் மற்றும் உயர் கல்வி அமைச்­சரும் சபை முதல்­வ­ரு­மான லக்ஷ் மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான இரு பிர­தான கட்­சிகளின் தேசிய அர­சாங்­கத்தின் மூலம் இனப்பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வு காணப்­படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை அபி­வி­ருத்தி நிர்­வாக நிலை­யத்தின் பொதுநிர்­வாக முகா­மைத்­துவ பட்­டப்பின் படிப்பு பட்­ட­ம­ளிப்பு விழா நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் குழு அறையில் நடை­பெற்­றது. இதில் பிர­தம அதிதி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றுகையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­­ட­வாறு கூறினார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

இரு பிர­தான கட்­சி­களும் இணைந்து புதி­யதோர் அர­சியல் கலா­சா­ரத்­தை நாட்டில் ஏற்­ப­டுத்தி தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இது ஒரு புதிய ஆரம்­ப­மாகும். 1948 ஆம் ஆண்டில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு கண்­பதை தவ­ற­விட்டோம்.

சுதந்­தி­ர­த்­திற்கு பின்­ன­ரான அனைத்து ஆட்­சி­யா­ளர்­களும் ஆட்­சி­ய­மைப்­பதை இலக்­காக கொண்டு இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாக முன்­னெ­டுத்­தனர். எனவே இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு காண முடி­யாமல் போனது. இதற்கு சுதந்­தி­ரத்தின் பின்­ன­ரான அனைத்து ஆட்­சி­யா­­ளர்­களும் பொறுப்­பேற்க்க வேண்டும்.

அன்று ஆசி­யாவின் ” சுவிட்­சர்­லாந்து ” என்று அழைக்­கப்­பட்ட இலங்­கை இன்று கடன் சுமையில் சிக்கித் தவிக்­கின்­றது.

1946 இல் இலங்­கையில் புதிய அர­சியல் அமைப்பு தயா­ரிக்­கப்­படும்­போது கண்டி சிங்­க­ள­வர்­களே தமக்கு அதி­காரப் பர­வ­லாக்கல் தேவை என கேட்­டனர். தமி­ழர்கள் அன்று அதி­காரப் பர­வ­லாக்­கலை கேட்­க­வில்லை. மாறாக ஒன்­று­பட்ட நாட்­டுக்குள் ஒற்­று­மை­யாக வாழத் தயார் என­ தமிழர்கள் உறு­தி­ய­ளித்­தனர்.

1956 இல் தமி­ழர்கள் மொழி உரிமை கேட்­டார்கள் அன்று அது மறுக்­கப்­பட்­டது. மொழிப்­பி­ரச்­சி­னைக்கு அன்று தீர்வு கண்­டி­ருந்தால் நியா­யத்தை பெற்றுக் கொடுத்­தி­ருந்தால் 30 வரு­ட­கால யுத்­தம் நாட்டில் எற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­காது.

இன்று நாட்டின் இரு பிரதான கட்­சி­களும் சேர்ந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­துள்­ளன. எனவே நிச்­சயம் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான தீர்வைக் காண்போம். இனப்­பி­ரச்­சி­னையை எதிர்­கால சந்­த­தி­­யி­ன­ருக்க விட்டுச் செல்ல மாட்­டோம். இனப்­பி­ரச்­சி­னையும் இன­வா­தத்­தையும் வைத்து அர­சியல் செய்யும் கலா­சா­ரத்­திற்கு தேசிய அச­ராங்கம் முடிவு கண்­டு­விட்­டது.

LEAVE A REPLY