முஸ்லிம்கள் ஹலால், ஹராம் பேணுவதால் மது அருந்துவது குறைவு – அமைச்சர் ராஜித

0
158

Rajithaமுஸ்லிம் மக்கள் ஹலால், ஹராம் பேணி வருகின்றமையால் மது அருந்துவதை தவிர்ப்பதாகவும் இதனால் எமது நாட்டில் இவர்கள் மதுபானம் பாவிப்பது குறைந்தளவிலே காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டில் உள்ள அனைவரையும் மது பாவனையில் இருந்து மீட்டெடுக்கவும், மது பாவனையற்ற நாடாக இலங்கையை மாற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு மகா சங்கத்தினருக்கு அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டிலிருந்து மது பாவனையை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என்றும், எனவே இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க மகா சங்கத்தினரின் தலையீடு அவசியம் என்பதால் அவர்களை அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY