ஒல்லிக்குள கிராமத்தில் இதுவரை காலமும் வரையருக்கப்படாத வீதிகள்

0
159

(M.T. ஹைதர் அலி)

unnamed (1)மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்நதுள்ள ஒல்லிக்குளம் கிராமத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் சகோதரர்கள் வசிக்கும் பகுதியொன்றில் இதுவரைகாலமும் வீதி அமைக்கப்படாத நிலை காணப்படுகின்றது. இது மாத்திரமிண்றி இக்கிராமத்திற்கு பல அத்தியாவசிய தேவைகள் இருந்தும் யாரும் கவனிக்காது புறக்கணிக்கப்பட்ட நிலையில் இக்கிராம மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தற்போது வரை மணல் தரையாக காணப்படும் இவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இப்பகுதிக்குரிய வீதி மற்றும் அதன் உள்ளக ஒழுங்கைகளும் இன்றுவரை சரியாக வரையருக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

இவ்வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் குறித்த வீதிக்கு நேரில் விஜயம் செய்து வீதியின் தற்போதைய நிலைமையை பார்வையிட்டதோடு அப்பகுதி மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

unnamed (2)

unnamed (4)

unnamed (5)

unnamed (6)

LEAVE A REPLY