பெண்களில் கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கான காரணங்கள்

0
267

uterusபெண்­களின் இனப்­பெ­ருக்கத் தொகு­தியின் முக்­கிய உறுப்­பாக கர்ப்­பப்பை அடி­வ­யிற்றில் உள்­ளது. இது சூல­கத்தின் ஹோர்­மோன்­களின் தூண்­டு­தலால் பரு­வ­ம­டையும் வய­தி­லி­ருந்து மெனோபோஸ் அடையும் வய­து­வரை ஒழுங்­கான மாத­வி­டாயை ஏற்­ப­டுத்தித் தொழிற்­ப­டு­கின்­றது/ இக்­கால கட்­டத்தில் இந்தக் கர்ப்­பபை சிசுவைத் தாங்கும் கரு­வ­றை­யாகத் தொழிற்­ப­டு­கின்­றது. ஆனால் இதே கர்ப்­பப்பை தான் பெண்­க­ளுக்கு வேத­னை­க­ளையும் சோத­னை­க­ளையும் கொடுக்கும் ஒரு அங்­க­மாக மாறு­கின்­றது.

அதா­வது இது அள­வுக்­க­தி­க­மாக மாத­வி­டாயை ஏற்­ப­டுத்தி பெண்­களை தட­மாறச் செய்யும். அத்­தடன் இந்தக் கர்ப்­பப்பை யில் மிகப் பெரிய பெரிய கட்­டிகள் வளர்ந்து பெண்­க­ளுக்கு வேத­னை­க­ளையும் அச்­சத்­தையும் ஏற்­ப­டத்­து­கின்­றது. மேலும் கர்ப்­பப்­பையில் புற்­று­நோய்கள், சில வேளை­களில் ஏற்­ப­டுத்­து­கின்­றது. ஆனால் இவ்­வா­றான கர்ப்­பப்பை நோய்கள் எல்­லோ­ருக்­கும ஏற்­ப­டு­வ­தில்லை. ஆகையால் கர்ப்­பப்பை உள்­ளது என்­ப­தற்­காக அதனை அகற்ற வேண்டும் என்று சொல்ல முடி­யாது. இவ்­வாறு கர்ப்­பப்பை அகற்­று­வ­தற்­கான சரி­யான கார­ணங்கள் நியா­யப்­ப­டுத்தி அவற்றை உரி­ய­வர்­ளக்குப் புரிய வைக்க வேண்டும்.

கர்ப்­பப்பை அகற்­றப்­ப­டும்­பேது என்ன நடை­பெ­று­கின்­றது?

இந்த சத்­திர சிகிச்­சையில் கர்ப்­பப்பையும் அதன் வாய்ப்­ப­கு­தியும் அகற்­றப்­ப­டு­கின்­றது. ஆனால் யோனி வாசல்­ப­குதி (Vagina) அகற்­றப்­ப­டு­வ­தில்லை. இத­னால்தான் கர்ப்­பப்பை அகற்­றப்­பட்­ட­வர்­களுக்கு மாத­விடாய் வரு­வ­தில்லை. ஆனால் தாம்­பத்­திய உறவில் ஈடு­பட முடியும். அத்­துடன் கர்ப்­பப்பை அகற்­றப்­ப­டும்­போது கட்­டாயம் சூல­கங்கள் அகற்­றப்­பட வேண்டும் என்­ப­தல்ல. இது சூல­கங்­களில் இருக்கும் அசா­தா­ரண தன்­மையைப் பொறுத்து அவை அகற்­றப்­பட வேண்­டுமா என முடிவு செய்­யப்­படும். ஏனெனில் சூல­கங்கள் தான் பெண்ணில் பெண்­மைக்­கு­ரிய தன்­மை­களைப் பேணிப் பாது­காக்கும் ஹோமோன்­களை சுரக்­கின்­றது. சூல­கங்கள் இவ்­வாறு பெண்­களின் 50– 51 வய­து­வரை தொழிற்­படும். அதன் பின்னர் இயற்­கை­யா­கவே தொழிற்­பா­டுகள் மற்றும் ஓமோன்­களின் சுரப்­புகள் என்­பன நின்­று­விடும்.

எனவே வயது குறைந்த பெண்­களில் அதா­வது 40– 45 வயதில் கர்ப்­பப்பை அகற்­றும்­போது சூல­கங்கள் அகற்­றப்­ப­டு­வ­தில்லை. ஆனால் 48– 50 வயதில் கர்ப்­பப்பை அகற்­றப்­ப­டு­மானால் அவ்­வேளை சூல­கங்­களும் அகற்­றப்­ப­டுதல் நியா­ய­மா­னது. ஏனெனில் சூல­கங்கள் இவ்­வ­யதில் இயற்­கை­யா­கவே தமது தொழிற்­பாட்டை நிறுத்தி விடு­கி­றது. ஆகையால் குறைந்த வயதில் கர்ப்­பப்பை அகற்­றப்­ப­டும்­போது சூல­கங்கள் அகற்­றப்­ப­டு­வ­தில்லை. ஆனால் 48– 50 வயதில் அகற்­றப்­ப­டும்­போது சூல­கங்­களும் அகற்­றப்­ப­டு­கின்­றன.கர்ப்­பப்பை அகற்­றப்­ப­டு­வ­தற்­கான சரி­யான கார­ணங்கள்

1) அதி­கப்­ப­டி­யான மாத­வி­டாயை வேறு வழி­களில் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது போகும்­போது சற்று வய­து­கூ­டிய பெண்­களில் இந்த சத்­திர சிகிச்சை மேற்­கொள்­ளப்­படும்.

2)கர்ப்­பப்பையில் வளரும் தசைக் கட்­டி­க­ளான பைபு­ரோ­யிட்­டுகள் (Fibroids) பெரி­ய­ன­வா­கவும் நோய் அறி­கு­றி­களை கொடுப்­ப­ன­வா­கவும் இருக்­கும்­போது கர்ப்­பப்பை அகற்­றப்­ப­டு­கி­றது.

3)கர்ப்­பப்பை யின் உட்­சு­வர்ப்­ப­குதி கர்ப்­ப­பைக்கு வெளியே வள­ரு­கின்ற எண்டோ மெற்­றி­யோசிஸ் (Endometriosis) நோய் உடை­ய­வர்­க­ளிலும் இந்த சத்­திர சிகிச்சை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

4)கர்ப்­பப்பையில் அல்­லது கர்ப்­ப­பையின் வாசல் பகு­தியில் ஏற்­படும் புற்­று­நோய்க்­கா­கவும் இந்த சத்­திர சிகிச்சை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

5)பிர­சவ வேளை­களில் அதி­கப்­ப­டி­யான குருதிப் போக்கு ஏற்­பட்டால் அதனைக் கட்­டுப்­ப­டுத்தும் பல முயற்­சி­களும் தோல்­வி­ய­டைந்தால் இறு­தியில் பெண்ணின் உயிரைக் காப்­பாற்­றும்­பொ­ருட்டு கர்ப்­பப்பையை அகற்றி குருதிப் போக்கை நிறுத்­தலாம்.

6)வயது கூடிய பெண்­களில் ஏற்­படும் கர்ப்­பப்பை இறக்கம் (Prolapse) போன்ற பிரச்­சி­னை­க­ளுக்கும் இந்த சத்­திர சிகிச்சை மேற்­கொள்­ளப்­படும்.

கர்ப்­பப்­பையை அகற்றும் சத்­திர சிகிச்சை எவ்­வா­றான வழி­களில் மேற்­கொள்­ளப்­படும்?

கர்ப்­பப்பை யை அகற்ற பாரம்­ப­ரி­ய­மாக வயிற்­றைப்­பெ­ரி­த­ளவில் வெட்டித் திறந்து செய்­யப்­படும். சத்­திர சிகிச்­சையே செய்­யப்­பட்டு வந்­தது. இதன்­போது கீழ் வயிற்றில் குறுக்­காக அரை அடி நீள­மான வெட்­டுக்­காயம் ஏற்­ப­டுத்­தப்­படும். ஆனால் இன்­றைய கால கட்­டத்தில் தொழில்­நுட்ப வளர்ச்சி கார­ண­மாக லப்­பி­ரஸ்­கோப்பி (Laparoscopy) அறி­மு­க­மா­னது. இதன் உத­வி­யுடன் வயிற்றில் பெரிய காயங்கள் இல்­லாது சிறிய துளை­களை மட்டும் போட்டு கர்ப்­பப்பையை அகற்­றக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. இந்தப் புதிய முறை மூலம் வயிற்றில் காயங்கள் சிறி­தாக இருப்­ப­துடன் சத்­திர சிகிச்­சையின் பின்னர் வயிற்றில் ஏற்­படும் வலி மற்றும் வைத்­தி­ய­சா­லையில் இருக்க வேண்­டிய காலப் பகுதி என்­ப­னவும் குறை­வாகும்.

வயிற்றில் எவ்­வித காயமும் இல்­லாமல் கர்ப்­ப­பையை அகற்றல் பொது­வாக கர்ப்­பப்பை இறக்கம் உள்­ள­வர்­களில் கர்ப்­ப­பையை அகற்­றுதல் வயிற்றை வெட்­டாமல் யோனி­வாசல் வழி­யாக மேற்­கொள்­ளப்­படும். ஆனால் கர்ப்­பப்பை இறக்கம் இல்­லாது இருக்­கும்­போது வேறு கார­ணங்­க­ளுக்­காக கர்ப்­ப­பையை அகற்­றும்­போதும் இதே முறையை கையாண்டு மேற்­கொள்­ளலாம். இதன்­போது பெண்­களின் வயிற்றில் எவ்­வித காயங்­களும் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. அத்­துடன் இதற்­காகப் பெண்­களை முழு­மை­யாக மயக்கத் தேவை­யு­மில்லை. கர்ப்­பபை அகற்­றிய சத்­திர சிகிச்­சையின் பின்னர் எவ்­வாறு வழ­மைக்குத் திரும்­பலாம்

கர்ப்­பப்பை யை அகற்­றிய பின்னர் 2 நாட்­களில் நீங்கள் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து வீடு செல்­லலாம். 5 நாட்­களில் பிளாஸ்டர் கழற்­றப்­பட்டு நீங்கள் குளிக்கக் கூடி­ய­தாக இருக்கும். தையல் கரையக் கூடி­ய­தாக இருப்­பதால் கழற்ற வேண்­டிய தேவை­யில்லை.

வீட்டில் 2 கிழ­மைகள் ஓய்வு எடுக்கவும். இதன்போது நடத்தல் மற்றும் படியேறுதல் மேற்கொள்ள முடியும். 6 கிழமைகளின் பின் குடும்ப உறவை ஆரம்பிக்கலாம். ஒரு மாதத்தில் அல்லது 6 கிழமைகளில் உங்கள் வழமையாக வேலைகளுக்குச் செல்ல முடியும். ஆனால் பாரம் தூக்குதலை 3 மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும். கர்ப்­பப்பை அகற்றும் சத்திர சிகிச்சை வப்பிரஸ்கோப்பி மூலம் மேற்கொள்ளப்பட்டால் வைத்தியசாலையிலிருந்து ஒரு நாளில் வீடு செல்லக்கூடியதாக இருப்பதுடன் பெண் முழுதாக குணமடைய எடுக்கும் காலமும் மிகக் குறைவாகவே உள்ளது. இது நவீன தொழில்நுட்ப முறையினால் மருத்துவ உலகுக்கும் மக்களுக்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.

LEAVE A REPLY