தென் பெருவை தாக்கிய 5.4 ரிச்டர் பூமியதிர்ச்சியில் சிக்கி அமெரிக்க சுற்றுலாபயணியொருவர் (66 வயது) உட்பட குறைந்தது 9 பேர் பலியானதுடன் 68 பேர்காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு தாக்கிய மேற்படி பூமியதிர்ச்சி குறித்துசர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெளியிட்டுள்ளன.
சிவே நகரிலிருந்து மேற்கே 7 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில்தாக்கிய .ந்தப் பூமியதிர்ச்சியால் இசுபம்பா, யன்கு, அகொமா மற்றும் மகா பிராந்தியங்கள்மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சுமார் 80 வீடுகள் சேதமடைந்துள்ளன.
பெருவை பூமியதிர்ச்சிகள் தாக்குவது வழமையாகவுள்ளது.பிரதான பூமியதிர்ச்சியைத்தொடர்ந்து அந்தப் பிராந்தியத்தில் மறுநாள் திங்கட்கிழமை பல பூமியதிர்ச்சி சம்பவங்கள்இடம்பெற்றுள்ளன.