ரியோ ஒலிம்பிக்: மைதானத்தில் கேமரா விழுந்து 7 பேர் காயம்

0
158

201608161354030100_Rio-2016-Seven-injured-when-overhead-camera-falls-in-Olympic_SECVPFஒலிம்பிக் பார்க் மைதானத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஸ்பைடர் கேமிராக்கள் மூலம் போட்டிகள் டெலிவி‌ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், பார்க் மைதானத்தில் அந்தரத்தில் தொங்கும் இந்த ஸ்பைடர் கேமிராவின் வயர் அறுந்தது விபத்து ஏற்பட்டது. இதனால் கேமிரா மைதானத்தில் விழுந்தது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் அதிகப்படியான காயம் யாருக்கும் ஏற்படவில்லை. விபத்தில் காயமடைந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.

ஏற்கனவே விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மைதானத்தின் அருகே பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது மைதானத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY