பதுர் ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி ரூபா 1 மில்லியன் செலவில் செப்பனிடும் பணி

0
130

(M.T. ஹைதர் அலி)

unnamed (11)காங்கேயனோடை பதுர் ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி ரூபா 1 மில்லியன் செலவில் செப்பனிடுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிதியானது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ ஹாபீஸ் நசீர் அஹமட் மூலம் PSDG நிதி மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. ஹாபீஸ் நசீர் அஹமட், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், விஷேட அதிதிகளாக நகர திட்டமிடல், நீர் வளங்கள் அமைச்சின் இணைப்புச் செயலாளர் ULMN. முபீன் (BA), காத்தான்குடி நகர சபையின் முன்னால் தவிசாளர் மர்சூக் அஹ்மத் லெப்பை, காத்தான்குடி இளைஞர் காங்கிரஸின் அமைப்பாளர் இல்மி அஹ்மத் லெப்பை, அப்பிரதேச பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY