கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளில் பேரில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்கு நிதியொதுக்கீடு

0
171

(எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்)

Naseer Hafizவாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் முயற்சியினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வேண்டுகோளில் பேரில் சுகாதாரப் பிரதியமைச்சர் பைசல் காசீமினால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் வைத்தியத் தளபாடக்கொள்வனவு, பாரந்தூக்கி நிர்மாணம் போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ரூபா 4650000 நிதியொதுக்கீடு செய்யப்படுள்ளது. அத்துடன், இதே அளவான தொகை நிதி ஏறாவூர் வைத்தியசாலைக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிதியொதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பிலான கடிதங்கள் சம்பந்தப்பட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இந்நிதியைக் குறிப்பிட்ட காலப்பகுதியில் பயன்படுத்த வேண்டியுள்ளதால், அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலான அறிக்கைகைகளை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் முதலமைச்சர் மேற்கொண்டு வரும் பாரிய முயற்சித்தொடரில் வைத்தியசாலை, பாடசாலை, வீதி அபிவிருத்திகளுக்கு பாரியளவிலான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதுடன், இவ்வாண்டுக்கான மாகாண சபையின் ஒதுக்கீடுகளில் கல்குடாவின் அபிவிருத்திற்கு பாரியளவிலான நிதி முதலமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காஸீம் அவர்கள், நாட்டிலுள்ள வைத்தியசாலைகளைத் தரமுயர்த்தி, அபிவிருத்தி செய்வதில் முழு மூச்சாகச் செயற்பட்டு வருவதுடன், கிழக்கு முதலமைச்சருடன் இணைந்து கிழக்கிலுள்ள வைத்தியசாலைகளைத் தரமுயர்த்தி அபிவிருத்தி செய்தவதற்கு பாரியளவிலான நிதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நேரத்தில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் வேண்டுகோளையேற்று வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு பாரியவிலான நிதியை ஒதுக்கீடு செய்து தந்த கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் , சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காஸீமிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY