(சப்னி அஹமட்)
மாகாண வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேச 3,396,785,94 ரூபா நிதியில் மனிக்காமடு (1.0கி.மீ) வீதியும், 3,534,64000 ரூபா நிதியில் இறக்காமம் அக்கரைப்பற்று லிங் வீதி (200மீ) மற்றும் 400மீ வீதிக்கான வடிகால் அமைப்புக்கான துவக்க நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றது.
இதன் போது இந்நிகழ்வுக்கு அதிதிகளாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி அம்மனி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ். உதுமலெப்பை, ஏல்.எல் தவம் ஆகியோருடன் இறக்காம பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் அதிகாரிகள் என பலருடன் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழுவின் ஏற்பாட்டில் இன்று மாலை (16) அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி வீதியினை 12,252,314,83 ருபா நீதியில் காபெட் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிகிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி அம்மனியும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ். உதுமலெப்பை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரிகள் மற்றம் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.