தைவானில் ராணுவ டாங்கி ஆற்றில் விழுந்ததில் 4 வீரர்கள் பலி

0
119

201608161701365961_4-Soldiers-Dead-As-Tank-Plunges-Into-River-In-Taiwan_SECVPFதைவான் நாட்டில் ராணுவ வீரர்கள் வருடாந்திர ஆயுதப் பயிற்சி மேற்கொண்டனர். இந்த முகாமில் பயிற்சி முடித்த 5 ராணுவ வீரர்கள், சி.எம்.11 ரக டாங்கியில் தெற்கு பிங்க்டங்க் பகுதி முகாமிற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது டாங்கியானது சிறிய பாலத்தின் வழியாக ஆற்றினை கடக்கும் போது தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தது. கனமழை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஒட்டுநர் அங்கிருந்து தப்பித்துவிட்டார். ஆனால் 4 வீரர்கள் டாங்கிக்கு அடியில் மாட்டிக் கொண்டனர். பின்னர் விரைந்து வந்த ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இருப்பினும் அவர்கள் 4 பேரையும் சடலமாகவே மீட்க முடிந்தது. இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY