காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சிறுவன் பாலியல் துஸ்பிரயோகம்: இளைஞர் ஒருவர் கைது

0
68

(விசேட நிருபர்)

Arrested kkyமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிசார் இன்று(16.8.2016) காலை கைது செய்துள்ளனர்.

கிரான்குளம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பூவரசந்தெருவிலுள்ள 7வயது சிறுவன் நேற்று முன் தினம் (14.8.2016) கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த போது அப்பிரதேசத்திலுள்ள 18 வயதுடைய இளைஞர் ஒருவர் குறித்த சிறுவனை காட்டுப்பகுதியொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதையடுத்து வீடு வந்த சிறுவன் அம்மாவிடத்தில் விடயத்தை தெரிவித்ததையடுத்து சிறுவனை அழைத்துக் கொண்டு சிறுவனின் அம்மா காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி ஏ.பி.வெதகெதரவின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் துரிதமாக விசாரணை செய்த காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.நிசாந்த தலைமையிலான பொலிஸ் குழு குறித்த சந்தேக நபரை 16.8.2016 செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவனுக்கு 25 ரூபா பணமும் ஒரு பிஸ்கட் பக்கட்டும் வழங்கி அந்த சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணை இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY