(Poem) வாழ்க்கை

0
23

(Mohamed Nizous)

கொள்ளுத் தாத்தாக்கு
கூகிள் தெரியாது
ஆனால்
வாக்கில் மாறாது
வாழத் தெரியும்

தாத்தாக்கு
அன்றொய்ட் தெரியாது
ஆனால்
அன்றாட வாழ்வை
அனுபவிக்கத் தெரியும்

அப்பாவுக்கு
அப்ளிகேஷன் தெரியாது.
ஆனால்
அப்பாவி மனதுடன்
அன்பு காட்டத் தெரியும்

பிள்ளைகளுக்கு
எல்லாம் உள்ளது.
நல்லது எது என
சொல்லவும் தெரியும்.
ஆனால்
கொள்ளுத் தாத்தாக்கள்
தாத்தாக்கள்
அப்பாக்கள்
நெஞ்சத்துள் இருந்த
வஞ்சமில்லா வாழ்க்கை
எங்கோ தொலைந்ததாய்
ஏங்குகிறார் பலரும்.

LEAVE A REPLY