அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் மக்கள் வீடுகளை இழந்து தவிப்பு

0
113

201608161040382142_Louisiana-Flooding-Far-From-Over-Despite-Expected-Respite_SECVPFஅமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது, அங்கு மக்கள் வீடுகளை இழந்து பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதுபோன்ற கனமழை 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் என்றும் இதனால் பேரிழப்புகள் ஏற்படும் எனவும் தேசிய வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது.

கடும் மழையின் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் 12,000 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்

வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டில் இருக்கும் கனமான பெட்டிகள் கூட அடித்துசெல்லப்பட்டு சாலைகளில் மிதக்கின்றன, இதனால் போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும், மீட்பு பணிகளில் 1,7000 காவல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY