நஸ்ப் லங்கா தயாரிக்கும் ஓலுவிலுக்கான ஆவணப்படம் விரைவில் !

0
170

unnamed (7)இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஓலுவில் பிரதேசத்தையும் அங்குள்ள மக்களின் தற்போதைய வாழ்க்கை நிலையையும் எல்லாத் தரப்பு மக்களின் பார்வைக்கும் கொண்டுவரும் நோக்கில் நஸ்ப் லங்கா ஆங்கில மொழி மூலமாக ஓலுவில் ஆவணப்படத்தை தயாரிக்கிறது.

அண்மைக்காலமாக ஓலுவில் கடலரிப்பு பற்றிய விடயம் ஊடகங்களில் அதிகமான இடத்தைப் பெற்றது இதற்கு காத்திரமான பங்களிப்பை நஸ்ப் லங்காவும் வழங்கியது என்பது குறிப்படத்தக்கது.
நஸ்ப் லங்காவின் ஓலுவிலுக்கான பயணத்தில் பெற்றுக்கொண்ட அனுபவம் அங்குள்ள சமூக நல அமைப்புகள் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளுடனான தொடர்புகள் கருத்தாடல்கள் மற்றும் மக்களின் உனர்வலைகள் ஓலுவில் ஆவணப்படத்தை எடுப்பதற்கான உந்துசக்தியய் எங்களுக்கு ஏற்படுத்தியது.

இந்த ஆவணப்படத்தின் உள்ளடக்கங்களாக :
1. ஓலுவில் பிரதேசம் பற்றிய ஒரு அறிமுகம்
2. ஓலுவில் பிரதேசத்தின் பிரசித்தமான அரச நிறுவனங்கள் – ஒரு பார்வை
3. ஓலுவில் கடலரிப்பும் அதன் விளைவுகளும் – மக்கள் கருத்துக்களின் தொகுப்பு
4. தேசியப் பிரச்சினையாக இன்று கருதப்படும் ஓலுவில் கடலரிப்புக்கான எதிர்காலத் தீர்வுத் திட்டம் ? போன்ற விடயங்களை கருப்பொருளாய் கொண்டது ஓலுவில் ஆவணப்படம்.

எங்களுடன் இந்த ஆவணப்படத் தயாரிப்பில் தகவல்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுகின்ற ஓலுவில் சமூக நல அமைப்புகள் ஜமாஅத் அமைப்புகள் மற்றும் தனி நபர் குழுக்களுடன் இணைந்தே நஸ்ப் லங்கா நிறுவனம் இம் மாதமளவில் ஓலுவிலுக்கான ஆவணப்படத்தை உத்தியபூர்வமாக சமூக ஊடக தளங்களிலும் “ஓலுவில் எழுச்சி” என்ற தலைப்புடன் இறுவெட்டு வடிவத்திலும் வெளியீடு செய்யும்.

LEAVE A REPLY