நியூயார்க் விமான நிலையம் மூடல்

0
129

airport_2974156fஅமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குவதாக வதந்தி பரவியதால் அதன் 2 முனையங்கள் மூடப்பட்டன. சுமார் 4 மணி நேர சோதனைக்குப் பிறகே விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

நியூயார்க்கில் 1000 ஏக்கர் பரப்பளவில் ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. அதன் 8-வது முனையத்தில் நேற்றுமுன்தினம் இரவு துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தீவிரவாதிகள் விமான நிலையத்துக்குள் புகுந்து தாக்கு தல் நடத்துவதாக பயணிகள் மத்தியில் தகவல் பரவியது. விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பான இடங் களில் பதுங்கினர். இதேபோல முதலாவது முனையத்திலும் தீவிர வாதிகள் நுழைந்திருப்பதாக தகவல் பரவியது. அந்த முனையத் திலும் பயணிகள் பதற்றமடைந்து நாலா புறமும் சிதறி ஓடினர்.

இதைத் தொடர்ந்து 1, 8-வது முனையங்கள் மூடப் பட்டன. அங்கிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட் டனர். அமெரிக்க அதிரடிப் படை களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் 2 முனையங்களிலும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால் துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் கிடைக்க வில்லை. பயணிகளும் அவர் களின் உடைமைகளும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். ஆனால் சந்தேகப் படும்படி யாரும் இல்லை.

சுமார் 4 மணி நேர சோதனைக்குப் பிறகு விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதனால் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டன.

காரணம் என்ன?

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நேற்றுமுன்தினம் இரவு 100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டி நடைபெற்றது. இதில் உசேன் போல்ட் வெற்றி பெற்றபோது விமான நிலையத் துக்குள் இருந்த பயணிகளிடம் ஆர்ப்பரிப்பும் ஆரவாரமும் எழுந் துள்ளது. இந்த சத்தத்தால் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்துவதாக வதந்தி பரவி பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

LEAVE A REPLY