அஸாத் ­சாலியின் “ஒரே இரத்தம்“ அமைப்பினருடன் சிங்ஹ லேயினர் கடும் முறுகல்

0
48

1இன­வா­தத்­திற்கு எதிர்ப்­பினை வெளிக்­காட்­டியும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­களை ஆத ­ரித்தும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் ­சாலி தலை­மையில் நேற்று (15) கொழும்பு பௌத்­தா­லோக மாவத்­­தையில் கூடிய எக்­கம லே (ஒரே ரத்தம்) என்ற அமைப்­புக்கும் சிங்ஹ லே (சிங்­கத்தின் ரத்தம்) என்ற அமைப்­புக்­கு­மி­டையில் கடு­மை­யான வாய்த்­தர்க்­கமும் மோதலும் மூண்­டது.

எக்­கம லே அமைப்­பினால் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பதாகை ஒன்றில் பொறிக்­கப்­பட்­டி­ருந்த வாச­கத்­துக்கு சிங்ஹ லே அமைப்பு உரிமை கொண்­டா­டியும் அதே­வேளை கடு­மை­யான எதிர்ப்­பினை வெ ளியிட்­ட­தாலும் அங்கு பெரும் கல­வர நிலை உரு­வா­­னது.

சிங்ஹ லே அமைப்­பினர் பொலி­ஸா­ருடன் கடு­மையான வாய்­தர்க்­கத்தில் ஈடு­பட்­டனர். இதனால் குறித்த பிர­தே­சத்தில் பதற்ற நிலை உரு­வா­கி­யி­ருந்­தது.

அரச ஆத­ரவு அமைப்­பான எக்­கம லே என்ற அமைப்­பினர் அசாத் ­சாலி தலை­மையில் நேற்று திங்­கட்­கி­ழமை கொழும்பு பௌத்­தா­லோக மாவத்­தையில் கூடினர்.

இதன்­போது சிங்­க­ளவர், தமிழர், முஸ்லிம், கிறிஸ்­தவர் ஆகிய சக­ல­ரதும் ரத்­தங்கள் ஒன்­றா­கவே இருக்கும். அதனால் இன, ரத்த பேதங்கள் என்று எதுவும் இல்லை. அனை­வரும் இலங்­கையர் என்ற கோணத்­திலே பார்க்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்தும் விதத்­தி­லான பதா­கை­களை ஏந்­திக்­கொண்டு ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்­தது.

flagggg2இந்த சந்­தர்ப்­பத்தில் அவ்­வி­டத்­திற்கு திடீ­ரென பிர­வே­சித்த சிங்ஹ லே அமைப்­பினர் எந்த காரா­ணத்­திற்­காக சிங்­கள ரத்தம் (சிங்ஹ லே) என்ற வாசகம் ஏன் சேர்த்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இந்த வாசகம் எமது அமைப்பின் பெய­ரையும் குறிக்­கின்­றது. தற்­போது இனக்­கு­ழுக்­க­ளுக்­கி­டையில் மோதல்கள் எதுவும் இல்லை. அவ்­வா­றாயின் ஏன் நீங்கள் மேற்­கண்­ட­வாறு சிங்ஹ லே என்ற வாச­கத்தை வேறு­ப­டுத்தி உங்கள் பதா­கை­களில் ஏந்­திக்­கொண்­டுள்­ளீர்கள் என கேள்­வி­களை தொடர்ச்­சி­யாக அடுக்­கிய வண்ணம் சிங்ஹ லே அமைப்­பினர் கடு­மை­யான தொனியில் கோசங்­களை எழுப்­பினர். அத்­துடன் கல­வ­ரத்­தையும் ஏற்­ப­டுத்­தினர்.

இதன்போது அசாத்­சாலி தலை­மை­யி­லான எக்­கம லே அமைப்­பினர் சிங்ஹ லே அமைப்­பி­ன­ரி­டத்தில் சுமு­க­மான பேச்­சு­வார்த்தை நடத்த முற்­பட்­ட­போதும் அதனை சிங்ஹ லே அமைப்பு ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அதே சம­யத்தில் எக்­கம லே அமைப்­பினை சேர்ந்த ஒருவர் கையில் இருந்த சிங்ஹ லே என்ற வாசகம் எழு­தப்­பட்ட பதா­கை­யையும் சிங்ஹ லே அமைப்­பினர் கிழித்­தெ­றிந்­தனர் .

இந்­நி­லையில் இரு அமைப்­பி­ன­ருக்கும் எதி­ரான போராட்­டமும் வாய்த்­தர்க்­கமும் முறுகல் நிலையை எட்­டவே அவ்­வி­டத்­திற்கு பொலிஸார் வந்து குவிந்­தனர். இதன்­போது பொலி­ஸா­ருக்கும் சிங்ஹ லே அமைப்­பி­ன­ருக்கும் இடை­யி­லான வாக்­கு­வாதம் கடு­மை­யாக முறுகல் நிலை ஒரு மணித்­தி­யா­லத்­திற்கும் மேலாக நீடித்­தது.

இந்­நி­லையில் கறு­வாத்­தோட்டம் பொலி­ஸாரின் நீண்ட நேர முயற்­சியின் பின்னர் முறுகல் நிலைக கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது. எனினும் அதன்­பின்­னரும் எக்­கம லே அமைப்­பினர் நல்­லி­ணக்கம், சக­வாழ்வு ஆகிய விட­யங்­களை வலி­யு­றுத்தி பாடல்­களை பாடினர்.

மறுபுறத்தில் சிங்ஹ லே அமைப்பினர் எக்கம லே அமைப்பினரின் பாடல்களுக்கு எதிராக “ஊ” சத்தம் இட்டவாறு திரிபு படுத்தப்பட்ட தேசிய கொடியினையும் அசைத்து கொண்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து ஒரு சில மணி நேரங்களுக்கு பின்னர் அவ்விடத்ததை விட்டு இரு தரப்பினரும் நீங்கி சென்றமை குறிப்பிடத்தக்கது.

#Virakesari

LEAVE A REPLY