காலியில் “வீட்டுக்கு வீடு மரம்”

0
112

(ஷபீக் ஹுஸைன்)

1H6A9289ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் தேசிய ரீதியாக முன்னெடுத்துள்ள ‘வீட்டுக்கு வீடு மரம்’ வேலைத்திட்டம் இன்று (15) காலி மாவட்டம், நுகதுவ, அக்குரஸ்ஸ, சமகிவத்த, ஜின்தோட்ட போன்ற இடங்களில் நடைபெற்றது.

கட்சியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், காலி மாவட்ட அமைப்பளாருமான அல்ஹாஜ் ஹஸன் ஷரீப், அக்மீனைத் தொகுதி அமைப்பாளர் எம்.எச். முஹம்மட் ஏற்பாடு செய்த இதில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒவ்வொரு வீடாக சென்ற மரத்தை நட்டியதுடன், மரம் நட்டிய வீடுகளுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பற்றி விளக்கியதுடன், ஒவ்வொரு வீட்டினதும் நிலமைகள் பற்றி அறிந்துகொண்டார்.

1H6A9313

LEAVE A REPLY