கொங்கோ கிராமத்தில் 64 பேர் வெட்டிக் கொலை

0
68

Kongo aகொங்கோ ஜனநாயக குடியரசில் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 64ஐ எட்டியுள்ளது.

வடக்கு கிவோ மாகாண கிராமம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கும் தாக்குதலில் பொதுமக்கள் கத்திகளால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இராணுவம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் 64 சடலங்களை மீட்டிருப்பதோடு தொடர்ந்தும் தேடுதல் இடம்பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உகண்டா நாட்டு கிளர்ச்சி குழுவான ஜனநாயக கூட்டுப்படை மீது கொங்கோ இராணுவம் குற்றம் சாட்டுகிறது.

குறித்த பிராந்தியத்தில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பழிதீர்க்கும் வகையில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக இராணுவ பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக கூட்டுப்படை ஒரு இஸ்லாமியவாத கிளர்ச்சி குழுவாகும். இது உகண்டா அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவதோடு கொங்கோவின் கிழக்கு பகுதியிலும் கடந்த இரண்டு தசாப்தத்திற்கு மேலாக செயற்படுகிறது.

பொது மக்கள் மீதான வன்முறைகளுக்கு இந்த கிளர்ச்சி குழு மீதே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

#Thinakaran

LEAVE A REPLY