கல்குடா மத்திய குழு கூட்டத்தில் கிழக்கின் எழுச்சிக்கெதிராகவும் தலைவருக்கு ஆதரவாகவும் ஏகமான தீர்மானம்

0
160

received_671534592994537ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா மத்திய குழுக்கூட்டம் கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான கணக்கறிஞர் சகோதரர் HMM. றியாழின் தலைமையில் கடந்த 2016.08.06ந் திகதி நடைபெற்றது.

கல்குடா முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து அழைக்கப்பட்ட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், சகோதரர் றியாழ் அவர்கள் கட்சி தொடர்பாகயும் சர்வதேச, தேசிய, பிரதேச ரீதியான கட்சியின் தொடர்புகள் எனப்பல்வேறுபட்ட தகவல்களுடன் உரையாற்றினார்.

சர்வதேச ரீதியாக கட்சி இன்று எவ்வாறு பலம் பெற்று வருகின்றதென்பதைச் சுட்டிக்காட்டிய கணக்கறிஞர் றியாழ், மறைந்த எமது பெருந்தலைவர் MHM. அஷ்ரப் காலத்தில் சர்வதேசத்திலிருந்து கிடைத்த உதவிகள், நன்கொடைகள் என்பவற்றை மீண்டும் பெற்று, கட்சியினூடாக முஸ்லிம் சமூகத்திற்கு நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளை நடாத்தி வருகின்றோம்.

அந்த வகையில், நாம் மலேசியா, சவுதி அரேபியா, ஓமான், துருக்கி போன்ற நாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதுடன், பல வெளிநாட்டு தொண்டு அமைப்புக்களுடனும் உறவுகளைப் பலப்படுத்தி வருகின்றோம்.

இன்ஷா அல்லாஹ், எமது முஸ்லிம் சமூகம் இதன் மூலம் நிச்சயம் வெற்றி பெறும் (அல்லாஹ் போதுமானவன்) எனக் கூறிய றியாழ், இதற்கு ஆலோசனையும், வழிகாட்டலும், தலைமை தாங்கி வழிநடாத்துவதும் எமது தேசியத்தலைவர் றவூப் ஹக்கீம்தான் எனக் குறிப்பிட்டார்.

தேசிய ரீதியாக இன்று கட்சி மிகப்பலம் பெற்றிருப்பதுடன், இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் எமது கட்சியில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாகவும், கட்சி தலைமையில் மிகுந்த எதிர்பார்ப்புக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

இதன் காரணமாக, எதிர்பார்ப்பு சற்று காலதாமதப்படுகின்ற போது, அதனைப்பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக எமது தலைமையை விமர்சிக்கின்றனர். இது தான் தற்போது நடைபெறுகின்றது.

இன்ஷா அல்லாஹ். குறித்த அரசியல்வாதிகளின் வேஷம் கலையும் போது நாம் பிரகாசமாகத் தென்படுவோம். இதற்கான உத்திகளையும், திறமையானவர்களின் மசூராக்களையும் அடிக்கடி தலைவர் பெற்று வருகின்றார்.

எமது பிரதேசத்தைப் பொறுத்த வரை, நாம் கட்சி அரசியல் வேலைகளைச் செய்யாமலேயே எமது பக்கம் அதிக நண்பர்கள், பிரதேசத்தலைவர்கள் இணைந்து கொள்கின்றனர். இதற்குப் பிரதான காரணம் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களை மாற்றுகின்றான். (அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்து கொள்வோம்)

என்னைப் பொறுத்த வரைக்கும் நான் அரசியலை ஒரு வணக்கமாக இபாதத்தாக பார்க்கின்றேன். எனக்கு தெரிந்தவற்றை நான் உங்களுக்கு கூறுவேன். தெரியாதவற்றை தெரியாதென்று சொல்வேன். அபாண்டமாக பழி சுமத்தமாட்டேன். யாரையும் வஞ்சம் வைத்து குழி பறிக்கமாட்டேன். நீங்கள் தவறான அல்லது பிழையான முறையில் அரசியலில் முன்னுக்கு வந்தவர்களை எனக்கு உதாரணம் காட்ட வேண்டாம்.

சரியான முறையில் அரசியலில் முன்னுக்கு வந்தவர்கள் ஏராளம். அப்படியானவர்கள் எமது ஊரில் மறைந்து கொண்டு அதிகம் பேர் அரசியல் செய்கின்றார்கள். ஆலோசனைக் கூறுகின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் அவர்கள் வெளிக்கொணரப்படுவார்கள் எனக்கூறிய சகோதரர் றியாழ், இன்றைய மத்திய குழுக்கூட்டத்தில் தவறுதலாக அல்லது எனக்குத்தெரியாமல் யாரும் விடுபட்டிருந்தால், என்னை மன்னிக்குமாறும் பெரு மனதுடனும், அடக்கமாகவும் தனதுரையில் கேட்டுக் கொண்டார்.

பின்வரும் தீர்மானங்கள் மத்திய குழுவால் எடுக்கப்பட்டு, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

received_671534592994538

1. மத்திய குழுவின் செயலாளராக சகோதரர் MSM.பஷீர், MPCS வீதி, ஓட்டமாவடி மற்றும் உதவிச்செயலாளராக சகோதரர் M.B. நவாஸ், நூரிய்யா பள்ளிவாயல் வீதி, பிறைந்துறைச்சேனை ஆகியோர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

2. கிழக்கின் எழுச்சி என்ற பெயரில் கட்சிக்கெதிராகவும் தலைவருக்கெதிராகவும் கோஷமிட்டு வரும் சில்லறைகளுக்கெதிராகளுக் கெதிராகவும், முரண்பட்டு பிரபல்யப்படுத்திக் கொள்ள நினைக்கும் நபர்களுக்கெதிராகவும் கல்குடா மத்திய குழு பலத்த கண்டனத்தை வெளியிடுவதுடன், எமது கட்சியையும், தலைமையையும் பலப்படுத்தி கட்சியை முன்னேற்ற வேண்டியது அவசியமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

3. கல்குடா அபிவிருத்தியில் அக்கரை கொண்டு செயற்படும் அத்தனை பேரையும் எமது மத்திய குழு நேசக்கரம் கொண்டு அழைப்பதெனவும் தீர்மானம் மேற்கொண்டது.

4. மத்திய குழுவின் போசகர்களாக கிழக்கு முதலமைச்சர் கௌரவ அல் – ஹாஜ் நஸீர் அஹமட் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களும், கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

தகவல்: வை.எம்.பைரூஸ்
வாழைச்சேனை

LEAVE A REPLY