மதுபானம், சிகரட்: 90 வீத வரியை அங்கீகரிக்குமாறு ஆர்ப்பாட்டம்

0
28

3-1_15082016_kaa_cmyமதுபானம் மற்றும் சிகரட் வெற்வரியை 90 வீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நோர்வூட் பொயிஸ்டன் தோட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.மதுசாரம் மற்றும் புகைத்தல் விளம்பரங்களை அம்பலப்படுத்தும் இளைஞர் அணியினர் நேற்று(15) இதனை ஏற்படு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் மது ஒழிப்பு தொடர்பிலான வீதி நாடகங்களும் இடம்பெற்றதுடன் பெரும்பாலான இளைஞர் யுவதிகளும் இதில் கலந்துகொண்டனர்.சுகாதார அமைச்சரும், ஜனாதிபதியும் சிகரட் கம்பனிகளிடமிருந்து 100 க்கு 90 வீதமான வரியை அறவிடப்போவதாக குறிப்பிட்டிருந்தனர்.கடந்த வாரம் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் அமைச்சர்கள் அங்கீகரிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

எனவே நாளைய தினம் ஒன்றுகூடும் அமைச்சரவையில் சிகரட் கம்பனிகளிடமிருந்து 100 க்கு 90 வீதமான வரியை கட்டாயமாக அறவிட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படவேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்தே இந்த போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான விழிப்புணர்வுடன் கூடிய ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் சிகரட் பாவனை அதிகமாக உள்ளதால் சிகரட் கம்பனிகளிடமிருந்து அங்கு அதிகமான வரி அறவிடப்படுகின்றது.இதனால் சிகரட் பாவனை குறைவடையும் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். ஜனாதிபதி இவ்விடயத்தில் நல்ல நோக்கத்தோடு செயற்படுவதனால் இந்த திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஏனைய அமைச்சர்கள் ஆதரவு வழங்கி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கையை பொறுத்தவரையில் நாளொன்று 60 வீதமானோர் போதைப்பொருள் பாவனையால் மரணமடைகின்றனர்.எனவே இளைஞர்களையும் சிறுவர்களையும் காப்பாற்ற இந்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என இந்த பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் வேண்டு கோள்விடுத்துள்ளனர்.

#Thinakaran

LEAVE A REPLY