அவுஸ்திரேலிய அணி 379 ஓட்டங்கள்: 6 விக்கெட் வீழ்த்தினார் ரங்கன ஹேரத்

0
151

Sri Lanka Australia Cricketஇலங்கைக்கு எதிரான கடைசியும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக ஆடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெடையும் இழந்து 379 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி பெற்ற ஓட்டங்களை விட 24 ஓட்டங்கள் அதிகம் பெற்றது.

அவுஸ்திரேலிய அணியின் வீரர்கள் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்களை குவித்திருந்தது.அவ்வணி சார்பாக மார்ஷ் 64 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் ஸ்மித் 61 ஓட்டங்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.நேற்று மூன்றாம் நாளை தொடங்கிய ஆஸி அணி மார்ஷ்-ஸ்மித் ஜோடி இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 246 ஓட்டங்கள் பெற்றனர்.

மார்ஷ் 130 ஓட்டங்களையும் ஸ்மித் 119 ஓட்டங்களையும் பெற்றனர்.அவுஸ்திரேலிய அணிக்கு பின்னர் வந்த வோக்ஸ் 22 ஓட்டங்களுடனும் ஹென்றிக்ஸ் 4 ஓட்டங்களையும் நெவில் 14 ஓட்டங்களையும் பின்னர் ஆஸி அணிக்கு ஓரளவுக்கு நம்பிக்கையாக ஆடிய மிச்சல் மாஷ் 53 ஓட்டங்களையும் பெற்ற அதேவேளை பின்வரிசையில் ஆடிய லயன் 3 ஓட்டங்களையும் ஹசல்வூட் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து சென்றார். அவரின் விக்கெட்டை ரங்கன ஹேரத் வீழ்த்தினார்.பின்னர் ஹோலன்ட் ஒரு ஓட்டத்துடனும் ஸ்டோக் 9 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்கவில்லை.அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டையும் இழந்து 379 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை சார்பாக ஹேரத் 6 விக்கெட்டையும் பெரேரா இரண்டு விக்கெட்டையும் தனஞ்சய டி சில்வா மற்றும் லக்மால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸிற்காக ஆடிய இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 22 ஓட்டங்கள் குவித்துள்ளது.இலங்கை அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக டில்ருவன் பெரேரா -திமுத் கருணாரத்ன களமிறங்கினர்.பெரேரா 8 ஓட்டங்கள் பெற்றவேளை ஸ்டோக்கின் பந்தில் ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் இணைந்தார் கௌசால் சில்வா இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 8,2 ஓட்டங்கள் குவித்துள்ளனர். பந்துவீச்சில் ஸ்டோக் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இன்று போட்டியின் நான்காவது நாளாகும்.

#Thinakaran

SL v Aus

LEAVE A REPLY