அமைப்புக்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
148

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

6மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள சமூக மட்ட நிறுவனங்கள், மற்றும் பொது நல அமைப்புக்களுக்க மாவட்ட நாடளாளுமன்ற உறுப்பினர் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியில் இருந்து 18 இலட்ச ரூபாவுக்கான உபகரணங்களை வழங்கியுள்ளார்.

விசேட தேவையுடையோர் அமைப்பு, பாடசாலைகள் உள்ளிட்ட 15 அமைப்புக்களுக்கு இந்த அலுவலக உபகரணத் தொகுதிகள் நேற்று (15) திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள திணைக்களங்கள், கிராம அமைப்புக்கள் போன்றவற்றின் உதவி கோரிக்கைகளுக்கு அமைவாக முன்னுரிமை அடிப்படையில் மேற்படி உதவிகள் வழங்கப்பட்டதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

6

LEAVE A REPLY