சிரிய கிளர்ச்சியாளர் பஸ் மீது தற்கொலை குண்டு: 25 பேர் பலி

0
106

Syria ssசிரியாவின் இத்லிப் மாகாணத்தில் துருக்கி எல்லையை ஒட்டிய பகுதியில் பஸ் ஒன்றின் மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டு மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்மி எல்லைக் கடவைக்கு அருகில் சிரிய கிளர்ச்சியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியே தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குண்டு வெடிப்பை அடுத்து சம்பவ இடத்திற்கு துருக்கி அம்புலன்ஸ் வண்டிகள் விரைந்திருப்பதாக துருக்கி நாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இதில் பஸ் வண்டிக்குள் இருந்தே தற்கொலைதாரி குண்டை வெடிக்கச் செய்திருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் துருக்கி எல்லையை ஒட்டி பல குண்டு தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. சிரியாவுக்குள் செயற்படும் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி உதவி வருவதாக சிரிய அரசு குற்றம்சாட்டுகிறது.

இத்லிப்பின் பெரும்பகுதி ஜெயிஷ் அல் பதாஹ் கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதோடு அரச ஆதரவு படையினர் சிறு நகரங்களை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

#Thinakaran

LEAVE A REPLY