வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பற்றி ஹக்கீம், ரிசாத் பேசினார்கள்: வடமாகாண ஆளுணர்

0
136

“காணியின் ஆதாரங்களுடன் இன்னும் யாரும் வரவில்லை”

(சப்னி அஹமட்)

fj“நான் ஆளுநராக பதவியேற்று வந்த பின்னர் என்னுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் ஆகியோர் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் அவர்களின் சொந்தக் காணிகளிகளிலேயே குடியேற முடியாத நிலையில் இருப்பதாகவும், அவர்களைக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அன்மையில் என்னிடம் பேசினார்கள்” என வடமாகாண ஆளுநர் ரெஜினேட் குரே தெரிவித்தார்.

அன்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அலுமினியத் தொழிற்சாலையை திறந்து வைத்த பின்னர் இம்போட் மிரர் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் பேதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த இருவரின் வேண்டுகோளுக்கு அமைவாகவும், நான் ஏற்கனவே இது சம்மந்தமாக தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வந்துள்ளேன் என்றும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன் என்றும் யார் யார் காணிகளை இழந்தார்களோ அவர்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வெளியேறிய மக்களின் காணிகளை சிலர் பிடித்து அதற்கு போலியான உறுதிகளை முடித்து வைத்துள்ளனதாக அறியமுடிகிறது என கதைகள் வந்தாலும் அவ்வாறான பேச்சுக்களை எங்களிடம் யாரும் முன்வைக்கவுமில்லை. அப்படி இன்னும் யாரும் வரவில்லை. அவர்கள் சரியான ஆவனங்களை எடுத்துக்கொண்டு எம்மிடம் வந்தால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு காணிகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரையில் காணிக்குரியவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்; ஆனால் யாரும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY