மூதூர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நிகழ்வில் NFGG தவிசாளர் பிரதம அதிதி

0
79

(NFGG ஊடகப்பிரிவு)

IMG-20160815-WA0008CCDF நடாத்தும் மூதூர் பிரதேச அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நேற்று (15) மூதூர் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில் NFGG யின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத் விசேட அதிதியாகக் கலந்து கொண்டதோடு NFGG யினால் விளையாட்டு உபகரணங்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

CCDF நடாத்தும் இவ்வுதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 19 அணிகள் பங்கு பற்றுகின்றன. 10 ஆவது போட்டியான நேற்றைய நிகழ்வில் மூதூர் இக்பால் அணி மற்றும் ஹீறோ அணி என்பன பங்கு பற்றின. இப்போட்டியின் இறுதியில் பெனல்டி முறை மூலம் இக்பால் அணி வெற்றியீட்டிக் கொண்டது.

இன்றைய போட்டியின் சிறந்த அணிக்கான விருதினையும் பிரதம அதிதி பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் வழங்கிவைத்தார்.

இவ் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியானது மூதூர் உதை பந்தாட்ட சங்கம் (MFA) மற்றும் மூதூர் மத்தியஸ்தர் சங்கம் (MRA) ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்றைய நிகழ்வில் ஏனைய அதிதிகளாக மூதூர் உதை பந்தாட்ட சங்கத் தலைவர் றழீன் ஆசிரியர் அவர்களும் மூதூர் மத்தியஸ்தர் சங்க செயலாளர் சஜா அவர்களும் அஷ்செய்க் சாபி நழீமி அவர்களும் CCDF தலைவர் AH. லாபிர் அவர்களும் AUM மௌபீர் அவர்களும் அத்தோடு NFGG இன் மூதூர் பிரதேச செயற்குழு ஊறுப்பினர்களான IM சிப்லி ஹஸன், AH மிஸ்றுல் ஹாபி, VM ஹஸீன், RM பஸ்லின், AM றினூஸ் ஆகியோரும் இன்னும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

IMG-20160815-WA00201 IMG-20160815-WA00202

LEAVE A REPLY