நாமலுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியல்

0
108

namalபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.இன்று காலை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலமளிக்க ஆஜரான நாமல் ராஜபக்ஷவை நிதி மோசடி விசாரணைப்பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜபடுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நாமல் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY