நேபாளத்தில் 1000 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 33 பேர் உயிரிழப்பு

0
146

201608151933147040_33-killed-in-Nepal-road-accident_SECVPFநேபாள நாட்டில் பேருந்து ஒன்று 1000 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 85 பேரை ஏற்றிக் கொண்டு தலைநகர் காத்மண்டுவில் இருந்து கட்டிகே தெவுராலி பகுதிக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. அப்போது சாலையின் வளைவு ஒன்றில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்து 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 43 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்தனர்.

இதனையடுத்து நேபாள ராணுவத்தின் ஹெலிகாப்டர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்த 15 பேரை காத்மண்டிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதாக அந்நாட்டு வெளிவுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் பிரசண்டாவும் மீட்புப் பணிகளை துரித படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மோசமான சாலைகளும், அதிகமான ஆட்களை ஏற்றிக் கொண்டு செல்வதும் விபத்துக்களுக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY