தாய்லாந்தில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி

0
113

201608152245343324_Thai-military-copter-crash-kills-five_SECVPFதாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ராணுவம் விமானம் ஒன்று நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மோசமான வானிலை காரணமாக காணாமல் போனது.

இந்நிலையில் காணாமல் போன விமானம் விபத்துக்குள்ளானதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் அந்நாட்டின் 4-வது தரைப்படைப் பிரிவின் மேஜர் ஜெனரல் நோப்பார்ன் ருவன்சன் உயிரிழந்துள்ளதாக, லெப்டினன்ட் ஜெனரல் சோம்சக் நின்பன்ஜெர்குன் தெரிவித்தார்.

மேலும், “யுஹெச்-72 ரக லைட் ஹெலிகாப்டர் சியாங் மாய் நகரில் உள்ள தாய்லாந்தின் மிகப்பெரிய மலைப் பகுதி அருகே சென்றது. அந்த விமானம் மியான்மர் எல்லைப் பகுதி அருகே வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டு பின் பிசனுலோக் பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

மோசமான வானிலை காரணமாக சரியான வெளிச்சமின்மையால் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY