(Photos) இரு வேறு விபத்துக்களில் 3 பேர் காயம்; ஏறாவூரில் சம்பவம்

0
45

(முகம்மட் அஸ்மி)

WhatsApp Image 2016-08-15 at 20.39.12 (2)ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (15) மாலை இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் காயம் அடைந்த தமிழ் சகோதரர்கள் 3 பேர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 7.00 மணியளவில் ஏறாவூரில் இருந்து தனது மேசன் பணியை முடித்து விட்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சைக்கிளில் பயணித்த நபரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் காயங்களுடன் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே நேரத்தில் ஏறாவூர் சவுக்கடி வீதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் நாய் ஒன்றுடன் மோதியதில் விபத்துக்குள்ளான இளைஞர் ஒருவரும் காயங்களுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

WhatsApp Image 2016-08-15 at 20.39.12 WhatsApp Image 2016-08-15 at 20.39.12 (1)

LEAVE A REPLY