கிண்ணியாவில் விபத்து: ஓய்வுபெற்ற ஆசிரியர் அபூபக்கர் ஹம்ஷா வபாத்!

0
128

(அப்துல் சலாம் யாசீம்)

Janaza 01கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக துவிச்சக்கர வண்டியுடன் – மோட்டார் சைக்கிள் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் இன்றிரவு (15) 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றையவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா-குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் ஹம்ஷா (65 வயது) எனவும் இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அதே இடத்தைச் சேர்ந்த பீ.ஆர். பைறூஸ் (25 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் ஜனாஸா கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY