கடத்திச் செல்லப்பட்ட 3 மாடுகளுடன் ஒருவர் கைது

0
132

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

unnamed (8)மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணியில் ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ட் 14 2016) இரவு 3 மாடுகளைக் கடத்தி வந்த நபரைத்; தாம் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்படியான அனுமதிப்பத்திரமின்றி இந்த மாடுகள் மட்டக்களப்பு – பதுளைவீதிப் பிரதேசத்திலிருந்து ஏறாவூர் நகரப் பகுதிக்கு களவாக கொண்டுவரப்படும்போது பொலிஸார் இவற்றைக் கைப்பற்றினர்.

மனித நுகர்வுக்கு உதவாத மாடுகள் இறைச்சிக்காக கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே பொலிஸார் மறைந்திருந்து ஏறாவூர் மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த 63 வயதான நபரைக் கைது செய்ததோடு அவர்வசம் இருந்த கடத்திவரப்பட்ட 3 மாடுகளையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட 3 மாடுகளும் தற்சமயம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இது பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.

LEAVE A REPLY