காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நடைபெற்றது

0
143

(விசேட நிருபர்)

unnamed (16)காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்ற (15.8.2016) திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சரும் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பொறியியலாளர் சிப்லி பாறூக், எம்.எஸ்.சுபைர், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர உட்பட அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

unnamed (16)இதன் போது இவ்வாண்டு மேற் கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது.

2016ம் ஆண்டில் காத்தான்குடி பிரதேச செகலப்பிரிவில் 51 திட்டங்களுக்கு 72 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 31 திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY