பிரபல வர்த்தகர் சுட்டுக்கொலை : மகனுடன் ஜீப்பில் பயணித்தபோது சம்பவம்

0
153

1858127இனந்­தெ­ரியாத நபர்­களின் துப்­பாக்கிச் சூட் டுக்கு இலக்­காகி உயி­ரி­ழந்த அம்­ப­லாங்­கொடை பிர­பல வர்த்­த­க­ரொ­ரு­வரின் கொலை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேகநபர்­களை கைது செய்­வ­தற்­காக 3 பொலிஸ் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­விக்­கின்­றது.

அம்­ப­லாங்­கொடை மானி­முல்ல பிர­தே­சத்தை சேர்ந்த 53வய­தான பிரே­ம­சிறி என்ற வர்த்­தகர் அவ­ரது வீட்­டுக்கு அண்­மையில் வைத்து துப்­பாக்கிப் பிர­யோ­கத்­துக்கு இலக்­காகி உயி­ரி­ழந்தார். இவர் காலி மாவட்­டத்தின் கிரிக்கெட் சங்­கத்தின் தலை­வ­ராக செயற்­பட்­ட­வ­ரெ­னவும் அப்­ப­கு­தியின் கிரிக்கெட் வளர்ச்­சிக்­காக கடு­மை­யாக பாடு­பட்ட ஒரு­வ­ரென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அம்­ப­லாங்­கொடை நக­ரி­லி­ருந்து ஜீப்­பொன்றில் தனது 12 வய­தான மக­னுடன் வீடு நோக்கி சென்று கொண்­டி­ருந்த போது காரில் வந்த இனந்­தெ­ரி­யாத நபர்கள் சிலர் இவர் மீது துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொண்டு தப்பிச் சென்­றுள்­ளனர்.   துப்­பாக்கி பிர­யோகம் இடம்­பெற்ற இடத்­தி­லி­ருந்து ரீ56 ரக துப்­பாக்கி ரவைகள் இரண்டு பொலி­ஸாரால் மீட்­க­பப்­பட்டுள்ளது.

துப்­பாக்கி பிர­யோகம் இடம்­பெற்ற போது உயி­ரி­ழந்த நப­ரி­னா­லேயே ஜீப்­வண்டி செலுத்­தப்­பட்­டி­ருந்­த­தா­கவும் இச்­சம்­ப­வத்­தினால் அவ­ருடன் பய­ணித்த அவ­ரது மக­னுக்கு கண்­ணாடித் துகள்­களின் சித­றல்­களால் காயம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றன.

இக்­கொலை  இவ்­வ­ரு­டத்­தினுள் அம்­ப­லாங்­கொடை பொலிஸ் பிரி­வுக்குள் இடம்­பெற்ற 5 ஆவது கொலை­யென பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் அம்பலாங்கொடை பொலிஸ் தலைமையக குற்றப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகரின் கீழ் இடம்பெற்று வருகின்றன.

-MN-

 

LEAVE A REPLY