இரு வேறு கலாசாரங்கள் சந்தித்த ஒலிம்பிக் கடற்கரை கரப்பந்தாட்டம்; ஹிஜாப் அணிந்து களமிறங்கினார் எகிப்தின் தோவா எல்போபஷி

0
159

185221பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் நடைபெறும் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் கடற்கரை கரப்பந்தாட்டப் (பீச்வொலிபோல்) போட்டி யொன்றில் எகிப்திய, ஜேர்மனிய அணிகளுக்கு இடையிலான  சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இவ்விரு அணியினரும் முற்றிலும் மாறுபட்ட வகையிலான ஆடைகளுடன் இப்போட்டியில் மோதினர். பொதுவாக கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டி களில் விளையாடும் வீராங்கனைகள் பிகினி எனும் நீச்சலுடையுடனே விளையாடுவர்.

ஆனால் எகிப்திய வீராங்கனை களான தோவா எல்போபஷியும் நடா மீவாட்டும் உடலை முற்றாக மறைக்கும் வகையில் ஆடை அணி ந்து ஒலிம்பிக் போட்டி களில் பங்குபற்றினர்.

இவர்களில் தோவா எல்போபஷி ஹிஜாப்பும் அணிந்திருந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த 7 ஆம் திகதி நடைபெற்ற எகிப்து, ஜேர்மனி அணிகளுக்கு இடை யிலான போட்டியில் ஜேர்மனிய வீராங்கனைகளான கீரா வால்கென் ஹோர்ஸ் மற்றும் லோரா லட்விக் ஆகியோருடன் மோதினர்.

இதன்போது இரு தரப்பு வீராங்னைகளுக்கு இடையிலான ஆடைகள் மற்றும் கலாசார வித்தியாசம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

ரியோவின் கோபாகபானா கடற்கரையில் நடைபெற்ற மேற்படி போட்டியில் எகிப்தின் தோவா எல்போபஷியும் ஜேர்மனியின் கீரா வோக்கென் ஹோர்ஸ்டும் மோதியபோது பிடிக்கப்பட்ட புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது.

இரு வேறு கலாசாரங்களை இந்த ஒலிம்பிக் போட்டி சந்திக்க வைத்ததை பலர் வியந்துள்ளனர்.

மேற்படி போட்டியில் ஜேர்மனிய அணி வென்றது. எனினும், எகிப்திய வீராங்கனைகள் இப்போட்டி மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளனர்.

எகிப்தின் சார்பில் ஒலிம்பிக் கடற்கரை கரப்பந்தாட்டத்தில் பங்குபற்றிய முதல் வீராங்கனைகளாக தோவா எல்போபஷியும் நடா மீவாட்டும் விளங்குகின்றனர்.

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக நீண்ட காற்சட்டை முழுநீள கை கொண்ட அங்கிகளுடன் கடற்கரை கரபந்தாட்டத்தில் வீராங்கனைகள் பங்குபற்றுவதற்கு சர்வதேச கரப்பந்தாட்ட சம்மேளனம் (FIVB) அனுமதித்திருந்தது.

மேலும் அதிகமானனோருக்கு இவ்விளையாட்டில் ஈடுபட வாய்ப்பளிப்பதே இதன் நோக்கம் என அச்சம்மேளனம் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் எகிப்திய வீராங்கனை தோவா எல்போபஷி கருத்துத் தெரிவிக்கையில், ‘நான் கடந்த 10 வருடங்களாக ஹிஜாப் அணிந்து வருகிறேன்.

ஹிஜாப் அணிந்து இப்போட்டியில் பங்குபற்றுவதற்கு இவ் விளையாட்டு க்கான சர்வதேச அமைப்பு (சர்வதேச கரப்பந்தாட்ட சம்மேளனம்) எமக்கு அனுமதி வழங்கியுள்ளது.

 

LEAVE A REPLY