கொழும்பு வில்பத்து காத்தான்குடியில் ஐ.எஸ். இயக்க முகவர்கள் ஊடுருவல்: பொது பல சேனா

0
129

jvp2வெளிநா­டு­க­ளி­லி­ருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்­க­ர­வாத முக­வர்கள் கொழும்பு, வில்­பத்து, காத்­தான்­குடி போன்ற பிர­தே­சங்­க­ளக்கு ஊடு­ரு­வி­யி­ருப்­ப­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளது என தெரி­விக்கும் பொது­பல சேனா, அர­சாங்கம் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இது தொடர்­பாக பொது­பல சேனா வின் நிர்­வாகப் பணிப்­பாளர் கலா­நிதி டிலந்த வித்­தா­னகே மேலும் குறிப்­பி­டு­கையில், சிரி­யாவில் உயி­ரி­ழந்த இலங்­கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­திக்கு இவ் இயக்கம் நஷ்­ட­ஈடு வழங்­கி­யுள்­ள­தா­கவும் தக­வல்கள் கிடைத்­துள்­ளன.
அத்­துடன் பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான், மாலைதீவு, இந்­தியா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்­க­ர­வாத முக­வர்கள் இலங்­கைக்குள் ஊடு­ரு­வி­யி­ருப்­ப­தா­கவும் இவர்கள் கொழும்பு, வில்­பத்து, காத்­தான்­குடி போன்ற பிர­தே­சங்­களில் தங்­கி­யி­ருப்­ப­தா­கவும் இவர்­க­ளுக்கு அடை­யாள அட்டை பெற்றுக் கொடு­த்­துள்­ள­தா­கவும் அறி­ய­வ­ரு­கி­றது.

இது பயங்­க­ர­மான நிலை­யாகும். எனவே அர­சாங்கம் இவ் விட­யத்தில் அ­ச­மந்தப் போக்கை கைவிட்டு விழிப்­பு­ணர்­வுடன் செயற்­பட வேண்டும். பிரான்ஸ், இங்­கி­லாந்து நாடு­களில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்­க­ர­வாதம் தொடர்பில் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

ஆனால் அந்த நாடுகள் அப்­போது அதனைக் கவ­னத்திற் கொள்­ள­வில்லை.

இன்று அங்கு குண்­டுகள் வெடிக்­கும்­போதும் தாக்­குதல் நடத்­தப்­ப­டும்­போதும் அந்த நாடுகள் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றன.

இதே நிலை இலங்­கையில் ஏற்­ப­டு­வ­தற்கு முன்­ப­தாக அர­சாங்கம் உள­வுப்­ பி­ரி­வி­னை­ரையும், பாது­காப்பு தரப்­பி­ன­ரையும் பலப்­ப­டுத்த வேண்டும். இல்­லா­விட்டால் பயங்­க­ர­மான விளை­வு­களை நாடு சந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­படும்.

இன்று இலங்கை ஒலி­ப­ரப்­புக்­கூட்­டுத்­தா­பனம் முஸ்லிம்மய­மாக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு அறி­வித்­துள்ளோம். தொலைக்­காட்சி நிறு­வனம் (ரூப­வா­ஹி­னியும்) முஸ்லிம் மய­மாக்­கப்­படும் நிலை தோன்­றி­யுள்­ளது. இதன் மூலம் முஸ்லிம் அடிப்­படைவாதம் பரப்­பப்­படும் ஆபத்து உள்ளது.

அரசுக்கு நாம் எதிர்கால ஆபத்துக்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளோம். எனவே ஆக்கபூர்வமான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அரசின் கடப்பாடாகும் என்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.

-Vidivelli-

LEAVE A REPLY