இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று

0
129

indiaஇந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 இல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து இந்தியா தனி சுதந்திர நாடாகியது.

சுதந்திர தின விழா தலைநகர் புதுடெல்லியின் செங்கோட்டையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தூக்குக் கயிற்றை துச்சமென மதித்து உயிர்த்தியாகம் செய்த எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை நெஞ்சில் நினைத்துப் போற்றுவதற்கும், அவர்களின் தியாகங்களை நினைவுகூர்வதற்கும் உரிய பொன்னாள் இதுவாகும்.

70 ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டங்களை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்துவதாக புதுடெல்லி நகரி்ன் பிரதி பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வடக்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY