(Poem) உசைன் போல்ட்

0
45

(Mohamed Nizous)

இவனுக்கு
இருப்பது
இரண்டு கால்களா?
இல்லை
கரண்டு வீல்களா?
இடைக்கிடை
ஏற்படுகிறது
எனக்குள் சந்தேகம்.

உள்ளூரில்
ஓடும் போதே
உள்ளுக்குள்
உலக்கை போடுமே!
உலகப் போட்டியில்
ஓடுகிறான்.
ஓரத்தில் கூட
உதறல் இல்லை.
உதட்டுச் சிரிப்பாலும்
ஓயாத துடிப்பாலும்
மதங்களைத் தாண்டி
மனங்களை வென்றவன்.

கரு தோலுக்கும்
கத் தோலிக்கத்துக்கும்
அப்பால்
நிறத்துக்கும் மதத்துக்கும்
அப்பால்
உசைன் போல்ட் என்பது
உற்சாகமாக ஒலிக்கிறது
உலகம் எங்கும்.

தங்கம் எடுக்க
ஆதங்கம் வந்தால்
பொங்கி எழாமல்
பொறுமையாய்ப்
போராடு.
உசைன் போல்ட் வாழ்வை
அசை போடும் போது
அகப்படும் செய்தி இது.

இமைக்க மறந்து
ஜமெய்க்கா கொடியை
ஏக்கத்துடன்
பார்ப்போம்.
எங்கள் கொடியும்
என்றோ ஒரு நாள்
இப்படிப் பறக்கனும்.
அதற்கு
இங்கிதம் தெரியாது
இனவாதம் பேசுவோர்
இங்கே இருக்காது
பறக்கனும் அல்லது இறக்கனும்.

LEAVE A REPLY