(Poem) இந்திய ஒலிம்பிக்

0
30

(நிஷவ்ஸ் )

ஓடி விளையாடு பாப்பா -நீ
ஒலிம்பிக்கில் ஓடாதே பாப்பா
ஏறி பள்ளி உடை பாப்பா -நீ
ஏறாதே மெடல் எடுக்க பாப்பா
மாட்டைக் காப்பாற்ற பாப்பா-நீ
மாற்றாரை துன்புறுத்து பாப்பா
நாட்டுக்கு மெடல் எதுக்கு பாப்பா -நாம்
நாடியதை மோடி செய்வார் பாப்பா
சாதிக் கொடுமை செய்வோம் பாப்பா
சாக்கடைக்கு வாக்களிப்போம் பாப்பா
சாதிக்கும் ஒலிம்பைக்கை விடவும்
சதிக்கு நாம் முயற்சிப்போம் பாப்பா
சீனா அமெரிக்கா பாப்பா
வீணாய் மெடல் எடுப்பார் பாப்பா
வேணாம் நமக்கு அது பாப்பா
வெறி கொண்டு நீ தாக்கு பாப்பா

LEAVE A REPLY