கீழே விழுந்த பின்னரும் மனம் தளறாமல் மாரத்தானில் தங்கம் வென்று சாதனைப் படைத்த பிரிட்டன் வீரர்

0
157

201608142023446274_Rio-No-stopping-record-breaker-Mo-Farah-in-10-000m_SECVPFபிரேசில் நாட்டின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இதில் பிரிட்டன் நாட்டின் சார்பில் மொ பராக் (மொகமது பராக்) கலந்து கொண்டார். இவர் பந்தய தூரத்தை எளிதாக கடந்து கொண்டு வந்தார். 10 ஆயிரம் மீட்டரை நெருங்கும்போது திடீரென கால் தடுமாறி கிழே விழுந்தார். மற்ற வீரர்கள் அவரைத் தாண்டி வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

கிழே விழுந்ததால் வெற்றி பறிபோகி விடுமோ? என்று அஞ்சமால் விடாமுயற்சியால் எழுந்து மீண்டும் வேகமாக ஓடினார். இறுதியில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். கீழே விழுந்த பிறகு தனது முயற்சியால் வெற்றி பெற்ற மொ பராக் பிரட்டன் நாட்டிற்காக வரலாற்று சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன் தடகளத்தில் பிரிட்டன் வீரர்கள் மூன்று தங்க பதக்கம் வென்றது கிடையாது. முதன்முறையாக பராக் மூன்று தங்க பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனைப் படைத்து அசத்தியுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருந்தார்.

புதன்கிழமை 5 ஆயிரம் மீட்டர் மாரத்தானில் கலந்து கொள்கிறார். இதில் தங்கம் வென்றால், 1976-ம் ஆண்டு 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் மாரத்தானில் தொடர்ந்து இரண்டு முறை தங்க பதக்கங்கள் வென்ற பின்லாந்து வீரரான லஸ்ஸே விரேன் சாதனையை சமன் செய்வார்.

LEAVE A REPLY