போலியான பேராளர் மாநாட்டில் நியமிக்கப்பட்டவை தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட வில்லை – வை.எல்.எஸ் ஹமீட்

0
143

YLS Hameedஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இன் பதவி நிலை உத்தியோகத்தர்கள் நியமனம் தொடர்பாக சிலரது ஊடகப் பிரிவு என்ற பெயரில் சில பிழையான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் வை.எல். எஸ் ஹமீட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

போலியான பேராளர் மாநாட்டில் நியமிக்கப் பட்டதாக கூறப்பட்ட எந்தவொரு உயர்பீடமோ அல்லது அதன் உத்தியோகத்தர்களோ இன்று வரை தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட வில்லை. தேர்தல் ஆணையாளரின் பதிவில் இன்னும் உண்மையான எமது உயர்பீடமே இருக்கின்றது . இதற்கு மாற்றமான ஆதாரம் யாரிடமாவது இருந்தால் அதனை சமர்ப்பிக்கலாம் .எனவே புதிதாக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்களுக்கே இன்னும் நியமனமில்லை. அவர்கள் எவ்வாறு அடுத்தவர்களை நியமிக்க முடியும்.? எனவே, இதுவரை என்னால் வழங்கப்பட்ட நியமனங்களைத் தவிர புதிதாக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற யாராலும் ஏதாவது நியமனங்கள் வழங்கப்படுமானால் அது எழுதப்படுகின்ற தாளினுடைய பெறுமதி கூட அதற்கு இல்லை; என்பதைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், இன்று முந்தி முளைத்த செவியை பிந்தி முளைத்த கொம்பு மறைக்கின்ற நிலைமை மட்டுமல்லாமல் தங்களது அறியாமையைக் கூட அறியாமை என்று தெரியாமல் வெளிப்படுத்துகின்ற காலத்தில் இருக்கின்றோம் . இல்லை என்றால் மாநகர சபைத்தேர்தலில் ஒரு கட்சி சார்பாக போட்டியிட்ட ஒருவரை, அக்கட்சியின் அடிப்படை அங்கத்தவர் இல்லை என்று சொல்கின்ற நிலை வருமா? எனவும் கேள்வியெழிப்பியுள்ளார்.

LEAVE A REPLY