திருகோணமலை கன்னியா பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் ஆயுதங்கள் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைப்பு

0
95

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

Kanniya Trincoதிருகோணமலை-கன்னியா காட்டுப்பகுதியில் சர்தாபுர கிராம மக்கள், அருகிலுள்ள விஷேட அதிரடிப் படையினருக்கு தொலைபேசி மூலமாக காட்டுப்பகுதிக்குள் பை ஒன்று இருப்பதாக தெரிவித்ததை அடுத்து ஸ்த்தலத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் அதனை கைப்பற்றி உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் இன்று (14) பிற்பகல் 2.30மணியளவில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் 12, 40 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு 12 மற்றும் கிளைமோர் 03உம் கைக்குண்று 04கும் மீட்கப்பட்டதாகவும் மேலும் இது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கைப்பற்றப்பட்ட பொருட்களை நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY