ஓய்வு முடிவை கைவிட்டார், மெஸ்சி

0
99

201608140108543976_Gave-up-retirement-decision--Messi_SECVPFகடந்த ஜூன் மாதம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிலியிடம் அர்ஜென்டினா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. இறுதி போட்டிகளில் தொடர்ந்து தோல்வி ஏற்பட்டதால் விரக்தி அடைந்த அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் ஓய்வு முடிவை கைவிட வேண்டும் என்று சக வீரர்கள் உள்பட பலரும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் உருகுவே, வெனிசுலாவுக்கு எதிராக விளையாட உள்ள அர்ஜென்டினா அணியில் மெஸ்சியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இது குறித்து நேற்று விளக்கம் அளித்த 29 வயதான மெஸ்சி, ‘அணியின் நலன் கருதி ஓய்வு முடிவை திரும்ப பெற்றிருக்கிறேன். அர்ஜென்டினா கால்பந்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அவை தீர்க்கப்பட வேண்டும். எனவே நான் உள்ளிருந்து உதவ விரும்புகிறேன்’ என்றார்.

LEAVE A REPLY