நல்லாட்சியில் கூட தமிழ் பகுதிகளுக்கான அரச நியமனங்கள் முஸ்லிம்களாலும் சிங்களவர்களினாலும் நிரப்பட்டு வருகின்றன

0
157

(விசேட நிருபர்)

unnamed (4)நல்லாட்சியில் கூட தமிழ் பகுதிகளுக்கான அரச நியமனங்கள் முஸ்லிம்களாலும் சிங்களவர்களினாலும் நிரப்பட்டு வருவதாக ஆரையம்பதி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் எஸ்.மகேந்திரலிங்கம் தெரிவித்தார்.

நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் (13.8.2016) சனிக்கிழமை நடைபெற்ற போது அங்கு நல்லிணக்க பொறிமுறை பற்றிய ஆலோசனையை முன் வைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த அமர்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இந்த நாட்டில் நல்லிணக்கம் குறைவதற்கு காரணம் சுதந்திரத்தின்பின் இந்த நாட்டை ஆட்சி செய்த அரச தலைவர்களும், அரசியல் வாதிகளுமே காரணமாகும்.

நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் செய்த தவறுகள் செய்து கொண்டிருக்குதம் தவறுகள் வெளிப்படுத்தப்பட்டு அற்றுக்கு பரிகாரம் காணப்படல் வேண்டும். கல்லோயாக் குடியேற்றத்திட்டம் மலையக தமிழரின் குடியுரிமை பறிப்பு என்பவற்றை செய்த இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேணநாயக்க தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்த எஸ்.டபிள்யு ஆர்டி பண்டார நாயக்க தரப்படுத்தலைக் கொண்டு வந்து எமது மாணவர்களின் கல்வியை பாதிப்புக்குள்ளாக்கிய முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கா போன்றவர்களை நல்லிணக்கம் குறைய காரணமானவர்களாக எடுத்துக் கொள்ளலாம்.

இவர்கள் உட்பட இவர்களது வாரிசுகளான அரச தலைவர்கள் கடந்த கால தவறுகளை உணர்ந்து கொண்ட போதிலும் அவர்களது பதவி மோகமும் பதவி பறிபோகும் என்ற அச்சமும் இவற்றை திருத்துவதற்கு இடமளிக்க வில்லை.

இதற்கு இன்றைய நல்லிணக்க அரசு இன்றைய ஜனாதிபதியும் பிரதமரும் கூட விதி விலக்கல்ல. இந்த அரச தலைவர்கள் யாருமே தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் முழுமையாக நிறைவேற்றியது கிடையாது.

இன்றைய ஜனாதிபதி கூட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனிடம் வழங்கிய வாக்குறுதிகயை நிறைவேற்ற வில்லை. அதே போன்று வடக்கு மக்களின் காணிகளை ஆறுமாதங்களுக்குள் விடுவிப்பேன் எனக் கூறிய வாக்குறுதி போன்ற வைகளை உதாரணமாக குறிப்பிடமுடியும்.

நல்லிணக்கத்தை பாதிக்கும் அரசின் செயல்களாக அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட மாகாண சபைகளுக்கான காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க மறப்பதும் அற்றை மாகாண சபைகளின் ஆளுனர்கள் மூலம் கட்டுப்படுத்துவதும் அரச கரும மொழிச்சட்டத்தில் இலங்கையில் தேசிய அரச நிர்வாக மொழிகளாக சிங்களம் தமிழ் மொழிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்று வரை முழுமையாக அமுல் படுத்தப்பட வில்லை.

யுத்தத்தை காரணம் காட்டி வடக்கு கிழக்கு அபிவிருத்தி நிறுத்தப்பட்டிருந்தது. யுத்தம் முடிந்த பின்னரும் இழந்த அபிவிருத்தியை ஈடு செய்யக் கூடிய வகையில் வழங்கள் ஒதுக்கப்பட வில்லை.
யுத்த காலத்தில் தமிழர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்ற கருத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு அற்றினுள் பெரும்பகுதியான வேலைவாய்ப்புக்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது.

இன்று இந்த நல்லாட்சியில் கூட தமிழ் பகுதிகளுக்கான அரச நியமனங்கள் முஸ்லிம்களாலும் சிங்களவர்களினாலும் நிரப்பட்டு வருகின்றன. உதாரணமாக தனித்தமிழ் பிரதேசமான மட்டக்களப்பு மேற்கிலுள்ள கல்வி வலய பாடசாலைகளுக்கு முஸ்லிம் சிற்றூழியர்களும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பொலனறுவையைச் சேர்ந்த சிங்கள சிற்றூழியர்களும் நியமிக்கப்பட்டமை இதற்கு நல்ல உதாரணமாகும்.

யுத்தம் காரணமாக கல்வி பாதிக்கப்பட்ட தமிழரிடையே உயர் பதவிகளுக்கு போதியளவு தகுதியில்லாத தமிழர்கள் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் சிற்றூழியராவதற்கு கூட தகுதியில்லாதவர்களாக தமிழர்கள் இருக்கின்றார்களா கடந்த ஆட்சிக்காலத்தில் தேவையோ இல்லையே ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி செய்ய்பபட்டது. இந்த நல்லாட்சியிலும் பொலனறுவை எல்லா துறைகளிலும் அபிவிருத்;தி செய்யப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசின் பங்காளிகளைக் கொண்ட முஸ்லிம் பிரதேசங்கள்

அபிவிருத்தி அடைந்து வரும் நிலையில் எதிர்க்கட்சியினரைக் கொண்ட தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. நல்லிணக்கத்தை பாதிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் செயற்பாடுகளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசின் பங்காளிகள் அரசியல் வாதிகளின் அத்து மீறல்களும், அதிகார வெறியாட்டங்களும் நிறுத்தப்படல் வேண்டும்.

மட்டக்களப்பு வாவியை குப்பைகளால் காத்தான்குடி நகர சபை நிரப்பி வருகின்றது. காத்தான்குடியில் சேரும் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக யுனப்ஸ் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வாவியில் குப்கை கொட்டக் கூடாது என தீர்;ப்பளிக்கப்பட்டும் காத்தான்குடி கழிவுகள் இன்று வரை வாவியில் கொட்டி மண் நிரப்பப்பட்டு வாவியின் நீர் ஓட்டத்தை தடுத்து ஆரையம்பதி மக்களை வெள்ளத்தில் மூழ்கச் செய்து தன் நில விரிவாக்கத்தைச் செய்யும் காத்தான்குடி நகர சபையின் செயற்பாடு ஒட்டு மொத்த நண்ணீர் மீணவர்களின் வாழ்வாதாரத்தினையும் சுற்றுச் சூழலையும் பாதிக்கச் செய்துள்ளது.

பிரதேச சபைகள் தொடர்பாக 5.12.1987ம் திகதிய வர்த்தமாணி அறிவித்தலிலுள்ள எல்லைகளை மீறி ஆரையம்பதியின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்கும் காத்தான்குடி அரசியல் வாதிகளின் செயற்பாடு நிறுத்தப்படல் வேண்டும்.

ஆரையம்பதியிலுள்ள சதுப்பு நிலங்களையும் குளங்களையும் நிரப்பி குடியேற்றங்களை செய்வதுடன் இவற்றினை தடுக்கும் அரச அதிகாரிகளை அச்சுறுத்தவதும் மீறி தடுக்க முனைந்தால் அரசியல் அதிகாரத்தின் மூலம் மாவட்ட நிருவாகத்திற்கு அழுத்தம் கொடுத்து இடமாற்றம் செய்வதும் நிறுத்தப்படல் வேண்டும்.

ஆரையம்பதி கோவில்குளம் சிகரம் பகுதியில் மண்முனையில் இறுதி அரசியான உலக நாச்சியினால் புதைக்கப்பட்ட தொல் பொருள் கொண்ட காணியில் அத்துமீறி ஆக்கிரமித்து தொல் பொருற்களை களவாடி தொல் பொருள் ஆய்வினை மேற் கொள்ள தடையாக அழுததங்களை பிரயோகிக்கும் அரசியல் வாதிகளின் செயற்பாடு நிறுத்தப்படல் வேண்டும்.

வட்டத்துக்குரிய அரச நிறுவனங்கள் பல வற்றை முஸ்லிம் பிரசேதங்களுக்கு இடமாற்றம் செய்வதும் இம்மாவட்டத்தில் இடம் பெறுகின்றது. உதாரணமாக நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை மற்றும் சிறுகைத்தொழில் திணைக்களத்தின் புடவைக் கைத்தொழில் நிலையம் போன்ற வற்றை குறிப்பிடலாம்.

மத்திய கிழக்க நாடுகளினால் வழங்கப்படும் நிதியுதவிகள் மூலம் கட்டப்படும் வீடுகளில் தனியே முஸ்லிம்கள் மாத்திரமே குடியேற்றப்பட்டு அந்த நாட்டுப் பெயரால் அவை அழைக்கப்படுகின்றன.
உதாரணமாக ஈரான் சிற்றி, மற்றும் குவைட் சிற்றி, சதாம் ஹ{ஸைன் வீடைமப்புத்திட்டம் என்பவற்றை குறிப்பிடலாம்.

இந்தியா அரசாங்கத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் போது அதிலும் தமிழர்களுக்கு கிடைப்பதை விட அதிக வீடுகளை முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்கள் பிரதேசங்களுக்கு ஒதுக்கி கொடுக்கின்றார்கள்.

சுமார் 78 வருடங்களுக்கு மேல் செயற்பட்டு வரும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை எவ்வித முன்னேற்றமுமின்றி அவ்வாறே இருக்க அன்மையில் ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு பல் வேறு வசதி வாய்ப்புக்களை தேவைக்கதிகமாக பெற்றுள்ளமை அரசியல் மேலாதிக்கத்தின் எடுத்துக்காட்டாகும்.

ஆரையம்பதி கிழக்கிலுள்ள பிரதேசம் முழுமையாக காத்தான்குடி முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழர்களின் இந்து சமய கிரிகைகள் செய்ய முடியாத நிலையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணம் ஒன்றாக இணைக்கப்பட்டு சுயாட்சி வழங்கப்படல் வேண்டும். யுத்த விசாரணை சர்வதேச நீதிபதிகளினால் நடாத்தப்படல் வேண்டும். ஒருபக்கமுள்ள அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படல் வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப அந்த அதிகாரம் பண்முகப்படுத்தப்படல் வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் தமிழ் பிரதேசங்களில் ஆலயங்கள் சமூக நிறுவனங்களின் சம்மேளனம், முஸ்லிம் பிரதேசங்களில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இவற்றுக்கிடையில் கலந்துரையாடல் ஏற்படுத்தப்படல் வேண்டும்.

அவை ஒரு பக்க சார்பாகவோ அரசியல் அழுத்தங்கள் அற்ற வகையிலோ அவை முன்னெடுக்கப்படவேண்டும். நேருக்கு நேர் கதைக்கும் போது உறவு மேம்படும் என்றார்.

LEAVE A REPLY