இனக் குரோதக் கருத்துக்கள் வெவ்வேறு பிணக்குகளை எற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது: ஏ.எம்.பர்சாத்

0
132

(விசேட நிருபர்)

unnamed (3)இனக் குரோதக் கருத்துக்கள் வெவ்வேறு பிணக்குகளை எற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது என காத்தான்குடி சமூகத்தின் வட்ஸப் குழுமத்தின் பணிப்பாளர் ஏ.எம்.பர்சாத் தெரிவித்தார்.

நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் (13.8.2016) சனிக்கிழமை நடைபெற்ற போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

யுத்தம் முடிவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களும் தமிழர்களும் இன மத வேறுபாடின்றி வாழ்ந்து வரும் நிலையில் இனக் குரோதக் கருத்துக்கள் வௌ;வேறு பிணக்குகளை எற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது.

முஸ்லிம்கள் தீர்;வு மட்டத்திலும் சரி பேச்சுவார்த்தையிலும் சரி மூன்றாம் தரப்பாகவே காணப்படுகின்றனர்.

முஸ்லிம்களை மூன்றாம் தரப்பாக கொள்ளக் கூடாது. தீர்;வு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம்களும் ஒரு தரப்பாக கொள்ளப்படல் வேண்டும்.

தமது ஆதங்கங்கள் தமது தேவைகளை முன் வைக்க கூடிய அழுததமாக பிரயோகிக்கின்ற சபையில் தனக்கென ஒரு இடத்தை முன் வைக்கின்ற ஒரு தரப்பாக முஸ்லிம் இணைக்கப்படல் வேண்டும்.

முஸ்லிம்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பு என்பது உள் வாங்கப்படல் வேண்டும். அது நிதர்சமான உண்மையாகும்;. இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய மின முக்கியமான விடயமாகும்.

யுத்த காலத்தில் கடும் போக்கான நடவடிக்கை எதையும் மேற் கொள்ளாத முஸ்லிம் சமூகம் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு;ள்ளாhர்கள் என்பது உண்மையாகும்.

1990ம் அண்டு குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன நடந்தது என கண்டறியப்படல் வேண்டும்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் கருணா பிள்ளையான் ஆகியோர் விசாரணைக்குட்படுத்தப்படல் வேண்டும். 1990ம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயலில் இடம் பெற்ற படுகொலைச் சம்பவங்களுக்கு பொறுப்பாக இருந்த புலிகளின் அப்போதைய தளபதியான கருணா அம்மான் பிள்ளையான் விசாரணை செய்ய வேண்டும்.

குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்ட முஸ்லிம்களது புதை குழிகள் தோண்டும் விடயம் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது. முஸ்லிம் அரசியல் தலைமைகளால் இந்த விடயம் சாதிக்க முடியாத விடயமாக இருக்கின்றது. இதை பொது விடயமாக கருதி இதை கையாளவேண்டும்.

அதற்கான ஒரு சந்தாப்பத்தை இந்த செயலணி ஏற்படுத்த வேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும் என்றார்.

நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் (13.8.2016) சனிக்கிழமை நல்லிணக்க பொறிமுறை பற்றிய மக்கள் கருத்தறியும் செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட குழுவின் செயலாளர் ஏ.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.

இதில் குழு உறுப்பினர் அஷ்ஷெய்ஹ் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி உட்பட குழு உறுப்பினர்கள் கருத்துக்களையும் ஆலோசனைகழளயும் கேட்டறிந்து கொண்டனர்.

LEAVE A REPLY