100 மீட்டர் ஓட்டம்: ஜமைக்கா வீராங்கனை எலைனுக்கு தங்கம்

0
180

201608141135393827_Elaine-Thompson-wins-100m-gold-in-rio-Olympics-2016_SECVPFஉலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வருகிறது.

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு நடந்தது. இதில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன் 10.71 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கின் அதிகவேக வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

இங்கிலாந்து வீராங்கனை டோரி பவ் 10.83 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், மற்றொரு ஜமைக்கா வீராங்கனை ஷெலிவின் பிரேசர் 10.86 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்து வீரர் முகமது பரக் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 27 நிமிடம் 05.17 வினாடியில் கடந்தார்.

கென்யா வீரர் பவுல் தனுல் 27 நிமிடம் 05.64 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்க மும், எத்தியோப்பிய வீரர் தமிரா டோலா 27 நிமிடம் 06.26 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றனர்.

நீளம் தாண்டுதலில் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்தது. ஜெப் ஹெண்டர் 8.38 மீட்டர் தூரம் தாண்டி முதல் இடத்தை பிடித்தார். லுவாமன்யோன்கா (தென் ஆப்பிரிக்கா) 8.37 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், கிரேக் ரூதர் போர்டு (இங்கிலாந்து) 8.29 மீட்டர் தூரம் தாண்டி வெண்கல பதக்கமும் பெற்றனர்.

ஆண்களுக்கான வட்டு எறியல் போட்டியில் கிறிஸ்டேஸ் ஹார்டிங் 68.37 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். மலோச்ஸ்விகி (போலாந்து) 67.55 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளியும், மற்றொரு ஜெர்மனி வீரர் டேனியில் 67.05 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

பெண்களுக்கான ஹெப்டலத்லான போட்டியில் பெல்ஜியம் வீராங்கனை நபிஷா தயிம் 68.10 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். நடப்பு சாம்பியனான ஜெசிகா 67.75 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கமே பெற்றார். கனடா வீராங்கனை தெஷின் ஈட்டன 66.53 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் பெற்றார்.

LEAVE A REPLY