மைதானத்தில் மோதிக் கொண்ட ரோகித் சர்மா- டேரன் பிராவோவிற்கு 15 சதவீதம் அபராதம்

0
195

201608141742518595_Bravo-and-Sharma-fined-for-breaching-ICC-Code-of-Conduct_SECVPFஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிராஸ் ஐலேட்டில் நடைபெற்றது. நேற்றைய முன்தினம் 4-வது நாளில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்தது. மூன்று விக்கெட்டுக்களை இழந்து இந்திய திணறும்போது ரகானேவுடன் ரோகித் சர்மா நிலைத்து நின்று விளையாடினார்.

அப்போது ரோகித் சர்மாவை டேரன் பிராவோ சீண்டிக் கொண்டே இருந்தார். ரோகித் சர்மா பதிலுக்கு ஏதும் கூறவில்லை. அதன்பின் நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.

346 வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி சென்றது. இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டுக்கள் சரிந்தது. இசாந்த் சர்மா பந்தில் சாமுவேல்ஸ் கிளீன் போல்டானார். மறுமுனையில் டேரன் பிராவோ பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இவரிடம் ரோகித் சர்மா ஏதோ கூறினார்.

அப்போது பிராவோ ரோகித் சர்மாவை தள்ளிவிட்டார். உடனே, ரோகித் சர்மா தன் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் பிராவோவை தாக்கினார். இதனால் இருவருக்கும் இடையில் வார்த்தை போர் மூண்டது.

உடனே, விராட் கோலி மற்றும் நடுவர்கள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தனர். இவர்களது செயல் வீரர்களின் நன்னடத்தை வதிமுறைக்கு எதிராக இருந்ததாக போட்டி நடுவரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இருவரும் தவறு செய்தது தெரியவந்ததால் இந்த டெஸ்டின் சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் இருவருக்கும் அபராதமாக விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY