குருக்கள் மடத்தில் முஸ்லிம்களது புதை குழிகளைத் தோண்டுவதை கடந்த அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்தது: சிப்லி பாறூக்

0
187

(விஷேட நிருபர்)

DSCN8603“குருக்கள் மடத்தில் கடத்தி கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களது புதை குழிகளைத் தோண்டுவதை கடந்த அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்தது. இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் அதற்கான ஒரு தீர்வு இதுவரை கிடைக்கவில்லை” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று (13) சனிக்கிழமை நடைபெற்ற போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“1990ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் திகதி குருக்கள் மடத்தில் கடத்தி கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களது புதை குழிகளை தோண்டுகின்ற விடயம் கடந்த அரசாங்கத்தில் பல வகையான இழுபறிகள் காணப்பட்டன.

தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் கூட அதற்கான ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்ற ஒரு கவலை முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்றது. இது முஸ்லிம்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு சமூகத்திற்கும் என்னென்ன அநீதிகள் எந்தெந்த காலத்தில் இடம் பெற்றுள்ளது என்பதையும் அதற்கு எங்களது பரிந்துரைகள் என்ன என்பதை குறிப்பிடுவதற்காக சுயாதீனமாக ஒரு ஆணைக்குழு உருவாக்கப்படல் வேண்டும்.

யுத்தத்தினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் அவர்களது சொந்தக்காணியில் ஒரளவு மீள் குடியேற்றப்பட்டு வரும் நிலையில் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் அவர்களது சொந்தக் காணியில் மீள் குடியேற்றப்படாமலிருக்கின்ற விடயம் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

இதற்கு அரசியல் வாதிகளை மட்டும் குறை கூற முடியாது. நிருவாகத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்களும் ஒருகாரணமாகும்.

உயர் பதவிகளில் இருப்பவர்களும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபட வேண்டும் நல்லிணக்கத்துடன் ஊடாக இந்த மாவட்டத்தில் மாத்திரமல்ல இநத நாட்டிலே ஒரு சுமூகமான நிலைமையை தோற்றுவிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு அவர்களுக்கு உருவக வேண்டும்.

DSCN8596நல்லிணக்கம் என்பது எந்த சமூகமும் பாதிக்கப்படாத வண்ணம் கௌரவாக வாழ்வதற்கு சரியான வழி செய்யப்படல் வேண்டும். அதற்கான உனர்வு வரவேண்டும்.

அப்போதுதான் நல்லிணக்கம் என்ற சொல் அர்த்த முள்ளதாக மாறும் என நான் நினைக்கின்றேன்.

கடந்த யுத்தத்தின் பின்னரும் மக்கள் மத்தியில் கசப்புனர்வும் சந்தேகப்பார்வையும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

கடந்த கால யுத்தினால் தமிழ் மக்கள் கூடுதலான இழப்புக்களை சந்தித்துள்ளனர். அதே போன்று முஸ்லிம் மக்களும் கனிசமான அளவு பாதிப்புக்குள்ளகியுள்ளார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

சிவில் சமூகம் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த பாடுபட வேண்டுமே தவிர இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை சீர் குலைப்பவர்களாக இருக்க கூடாது

சிவில் சமூகப்பிரதி நிதிகள் என்பவர்கள் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஐக்கியம் என்பவற்றை ஏற்படுத்த பாடுபட வேண்டும்.

சிவில் சமூகம் என வருகின்றவர்கள் தாங்கள் சார்ந்த இனத்தை மறக்க வேண்டும்” என்றார்

LEAVE A REPLY